பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

irritability

598

islet


irritability : எரிச்சலூட்டும் தன்மை; எரிச்சல்படுதல்; உறுத்து தன்மை : 1. சினமூட்டும் தன்மை 2. ஒரு நிலைமைக்கு மட்டு மீறிய துலங்கல்.

irritable : கூருணர்ச்சியுள்ள : தசைகள், நரம்புகள் வகையில் புறத்தூண்டுதலினால் எளிதில் உயிர்ப்பியக்கம் எழுப்பப்பெறத்தக்க.

irritable bowel syndrome (IBS) : வயிற்றெரிச்சல் நோய் (IBS) : வயிறு இயங்குவதில் ஏற்படும் கோளாறு. இதில் அடிவயிற்றில் வலியுடன் வயிற்றுப்போக்கு அல்லது மலம்போகும் பழக்கத்தில் மாறுதல் உண்டாகும்.

irritant : எரிவந்தப் பொருள்; உறுத்தி : எரிச்சலூட்டக் கூடிய ஒரு பொருள்.

irritation : எரிச்சல்; உறுத்தல் : 1. எரிச்சலூட்டும் அழற்சிக்குத் துலங்கல். 2. நரம்பு அல்லது தசைத் தூண்டுதலுக்கு இயல்பான துலங்கல்.

IRV : ஐஆர்வி IRV : உள் மூச்சுக்காப்பளவு (Inspiratory Reserve Volume) என்பதன் சுருக்கம்.

ischaemia : குருதிப் பற்றாக் குறை; குருதியோட்டக்குறை; இரத்தக்குறை : உடலின் எந்த ஒரு பகுதிக்கும் இரத்தம் போதிய அளவு செல்லாதிருத்தல்.

ischemic colitis : குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி : கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது. -

ischaemic heart disease : இதயக் குருதிக் குறைநோய் : இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் உண்டாகும் இதய நோய்.

ischium : இடுப்பெலும்பு; இடுப்பெலிம்பின் கீழ்ப்பகுதி : உட்காரும் போது உடலைத் தாங்குகிற எலும்பு.

island : தீவு : சுற்றியுள்ள திசுவிலிருந்து துண்டிக்கப்பட்ட அல்லது மாறுபட்ட பண்புடைய ஒரு கட்டமைபபு.

islet : குறுந்தீவு; தீவுத்திட்டு : ஒரு வகைத் திசுவினுள்ளேயே இருக்கும் இன்னொரு திசு வகையின் ஒர் நுண்ணிய தனித்த திரள்.