பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jacobson's organ

605

Jaipur foot


அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.

Jacobson's organ : ஜேக்கப்சன் உறுப்பு : பெரும்பாலான பாலூட்டிகளில் உள்ள, ஆனால் மனிதரிடம் தொடக்க நிலையில் உள்ள இடைநாசி உறுப்பு. இது நுகர்வுணர்வு ஏற்பிகளைப் போன்றே நெடிகளுக்குச் செயற்படுகிறது. டேனிஷ் உடல்உட் கூறியியல் அறிஞர் லட்விக் ஜேக்கப்சன் பெயரால் அழைக்கப் படுகிறது.

Jacob's membrane : ஜேக்கப் சவ்வு : விழித்திரையிலுள்ள கண் நுண்கம்பிகளும் கூம்புகளும் அயர்லாந்து கண் இயல் வல்லுநர் ஆர்தர் ஜேக்கப் இதனை விவரித்துக் கூறினார்.

Jacob's syndrome : ஜேக்கப் நோய் : ரிஃபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் கண் சவ்வு அழற்சி, வாய்வெடிப்பு, அண்டகோசத் தோல் அழற்சி. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் இ.சி. ஜேக்கப் விவரித்துக் கூறினார்.

Jacosta complex : ஜாக்கோஸ்டா மனப்பான்மை : ஒரு தாய் தன் மகன் பாலினக்கவர்ச்சி கொள்ளுதல். கிரேக்கப் புராணத்தில் வரும் ஈடிப்பஸ் கதாபத்திரத்தின் தாய் ஜேக்கோஸ்டா இத்தகைய மனப்பான்மையுடன் இருந்தாள். அவள் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

jacquemier's sign : யோனிக் குழாய் நீலம் : தொடக்க நிலைக் கருப்பத்தில் யோனிக் குழாய்ச் சவ்வில் காணப்படும் நீலநிறம்.

Jaffe's reaction : ஜாஃப் எதிர்வினை : குருதிநீர்த் தசைப்புரத வினை. இது, ஆக்கலைன் பிக்ரேட் கொண்ட தசைப்புரதத்தின் சிவப்பு வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜெர்மன் வேதியியலறிஞர் மாக்ஸ் ஜாஃப் பெயரால் அழைக்கப் படுகிறது.

Jaggery : வெல்லம் : கரும்புச் சாறிலிருந்து தயரிக்கப்படும் பக் குவப்படுத்தப்படாத சர்க்கரை. இதன் 100 கிராமிலிருந்து 383 கிலோ கலோரி சக்தியும், 11:4 மில்லி கிராம் அயச்சத்தும் கிடைக்கிறது.

Jaipur foot : ஜெய்ப்பூர் பாதம் : மலிவான, குறை எடையுள்ள, நீர்புகாத, முழங்காலுக்குக் கீழே பொருந்தக்கூடிய இணைப்புச் சாதனம். இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.கே. சேத்தி என்பவர் இதனை வடிவமைத்தார். இது செயல் திறனுடையது. ஒப்பனைப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இதன் உதவியாளர் ஒருவர் சிரமமின்றி நடக்கலாம்; ஏறலாம்; உட்காரலாம்.