பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acronym

60

acrotrophoneurosis


acronym : எழுத்துச் சுருக்கச் சேர்க்கை : முதன்மைச் சொற்களின் முதல் எழுத்தைச் சேர்த்துக் கிடைக்கும் புதுச்சொல். (எ-டு). Acquired Immune Deficiency Syndrome: AIDS (எய்ட்ஸ் நோய்).

acronyx : திருகு நகம்.

acropachy : கை கால் விரல் திரள்தல் : கை விரல்களும் கால் விரல்களும் திரள்தல்.

acropachyderma : கைகால் விரல் திரட்சி அழற்சி :இந்த நோயின் போது நோயாளிக்கு கைகால் விரல்கள் திரட்சி அடையும். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். முகத்திலும் தலையிலும் தோல் அழற்சியும் திரட்சியும் காணப்படும்.

acroparaesthesia : கை மரமரப்பு : கைகளில் உட்கூச்செறிவும் மர மரப்பும் ஏற்படுதல்.

acroparalysis : புறஉறுப்பு வாதம், கை, கால் வாதம் : கை அல்லது காலில் வாதம் ஏற்படுதல், கை அல்லது கால் செயலிழத்தல்.

acropathology : புற உறுப்பு நோய்க் கூறுவியல்; அங்க நோய்க் கூறுவியல் : புறஉறுப்புகளில் ஏற்படும் நோய்களின் நோய்க் கூறுவியல்.

acropathy : புற உறுப்புநோய் : உடலின் புற உறுப்புகளில் ஏற்படும் நோய்களைக் குறிப்பது.

acrophobia : உயர அச்சம் : உயரமான இடங்களைப் பார்த்துப் பயப்படுதல்.

acroposthitis : ஆண்குறி முனைத் தோலழற்சி : ஆண்குறியின் முனைத் தோளில் அழற்சி ஏற்படுதல்.

acroscleroderma : கைகால் தோல் தடிப்பு நோய் : கைகால்களில் உள்ள தோல் தடித்துக் கடினமாதல்.

acrosclerosis: முகம், விரல், கை, கால் இரத்த ஊட்டக்குறை : தோல் தடிப்பு நோயும் தோல் நாட்நோயும் இணைந்து காணபடும் நோயினம். இந்த நோயுள்ளவருக்கு முகம், கழுத்து, கை, கால்களில் தோல் தடித்துக் காணப்படும், இரத்த ஊட்டக் குறைவு காணப்படும்.

acrostealgia : அங்க எலும்பு வலி.

acrotic : குறை அழுத்த நாடி.

acrotism : நாடித்துடிப்பின்மை; குறை நாடித் துடிப்பு : நாடித் துடிப்பை உணர முடியாமை. நாடித்துடிப்பு குறைவாக இருத்தல். -

acrotrophoneurosis : கைகால் குழிப்புகள் நரம்பழற்சி : கைகளிலும் கால்களிலும் இரத்த நாளங்களும் நரம்பிழைகளும் பாதிக்கப்படுவதால் குழிப்புகள் உண்டாகும். நரம்பழற்சி