பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jolle's test

610

jugular


Jolle's test: ஜோலஸ் சோதனை : பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார்.

Jolly's reaction : ஜாலி எதிர் வினை : ஒரு தசையில் மின் தூண்டலுக்குத் துலங்கல் ஏற்படாதிருத்தல். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் ஜாலி பெயரால் அழைக்கப்படுகிறது.

Jone's nasal splint : ஜோன்ஸ் மூக்குச் சிம்பு : மூக்கெலும்புகளில் ஏற்படும் முறிவுக் கட்டப் பயன்படும் ஒருசிம்பு அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜான் ஜோன்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Jone's test : ஜோன்ஸ் சோதனை : கண்ணிமைப்படலத்திலுள்ள செலுத்தப்படும் ஃபுளுரோசின். இது கண்ணிர் வடிதல் அதிகமாக இருக்கும்போது மூக்கடித் தொண்டையை அடைகிறது.

Joseph disease : ஜோசஃப் நோய் : முன்மூளையின் நரம்பு மண்டல மையம் சீரழிதல், சிறு மூளையின் பல்மையம் சீரழிதல். இந்நோய் பெர்க்கின்சோனிய நோயின் அம்சங்களை உடையது.

joule : யூல் : வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு.

Jourdain's disease : ஜோர்டான் நோய் : பல் ஈறுகளில் ஏற்படும் சீழ்க்கட்டு வீக்கம். ஃபிரெஞ்சு அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆன்செல்மே ஜோர்டான் பெயரால் அழைக்கப்படுகிறது.

judgement : பகுத்துணர்கை.

Judkin's coronary arteriography : ஜட்கின் நெஞ்சுப்பைத் தமனி வரைவியல் : தொடைக் குருதிக் குழி வழியாகச் செருகு குழாய் செலுத்தி தமனியை அளவீடு செய்தல். அமெரிக்க ஊடுகதிர்- கதிரியக்க மருத்துவ அறிஞர் ஜட்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.

jugular : கழுத்துச் : சார்ந்த கழுத்து அல்லது தொண்டை சார்ந்த பெரிய நரம்புகள்.