பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

K

kahntest : கான் சோதனை; கான் ஆய்வு : கிரந்தி நோயைக் (மேகப் புண்) கண்டறிவதற்கான ஒர் ஊனிர்ச் சோதனை.

kala azar : காலா அசார்; கருங்காய்ச்சல்; கரி காய்ச்சல் : கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவுகிறது.

Kalaemia : காலேமியா : குருதியில் பொட்டாசியம் இருத்தல்,

kallikrein : காலிக்கிரைன் : கின்னோஜனை பிராடிக்கினின் என்ற குருதி நாள விரிவகற்சி மருந்தாக மாற்றுவதற்கு உதவுகிற செரிமானப் பொருள்களின் குழுமம்.

kallikrein-kinin system : காலிக்கிரைன்-கினின் மண்டலம் : குருதி அழுத்தத்தைப் பேணுகிற நாள அழுத்தி இயக்கு நீர்கள். காலிக்கிரைன், ரெனின் வெளிப்பாட்டையும், கினின் உற்பத்தியையும் தூண்டுகிறது. கினின்கள் ஆற்றல் வாய்ந்த குருதி நாள விரிவகற்சி மருந்துகளும், நேட்ரியூ ரெட்டிக்ககளும் ஆகும்.

Kallmann's syndrome : கால்மான் நோய் : நுகர்வுணர்வுக் குமிழ்களின் குறை வளர்ச்சி காரணமாகவும், இரண்டாம் நிலை ஹைப்போ கோனாடிசம் காரணமாகவும் நுகர்வுணர்வு இல்லாதிருக்கும் நிலை. அமெரிக்க உளவியலறிஞர் ஃபிரான்ஸ் கால்மான் பெயரால் அழைக்கப்படுகிறது.

kaluresis : சிறுநீர்ப் பொட்டாசியம் : சிறுநீர் வழியாக பொட்டாசியம் அதிக அளவில் வெளியாதல்.

kamino body : காமினோ திரட்சி : மேல் தோலில் சிவப்பூதாச்சாய உயிரணுத் திரள் காணப்படுதல்.

kanamycin : கானாமைசின் : ஸ்டிரெப்டோமைசின் போன்ற உயிர் எதிர்ப்பொருள்.

Kandahar sore : கந்தகார் புண் : தோலில் ஏற்படும் காலா-அசார் போன்ற நோய். ஆஃகானிஸ்தானிலுள்ள ஒரு நகரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

kane surgery : கானே அறுவை மருத்துவம் : ஒர் அறுவை