பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acrylate

61

actinic


ஏற்படும். இரத்த ஊட்டக் குறைவு தோன்றும்.

acrylate : அக்ரிலேட் : அக்ரிக் அமிலத்தில் தயாரிக்கப்பட்ட உப்பு.

acrylics : உறுப்பு ஒட்டுப் பசைகள் : உடம்பில் செயற்கை உறுப்புகள் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும், வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பொருள்களின் தொகுதி.

act : செயல் வினை, சட்டம், செயலுறல்.

ACTH : ஏ.சி.டி.எச்.: 'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செய்கிறது.

acthar gel : அக்தார் கூழ் : இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய், கீல்வாத மூட்டுவீக்கம், ஒவ்வாமை நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

action : செயல், தசைப்புரதம் : தசை இழைகளில் காணப்படும் ஒரு வகைப் புரதம். இது 'மயோசின்' எனும் மற்றொரு தசைப் புரதத்தோடு இணைந்து தசையைச் சுருக்குவதற்கும் விரிப்பதற்கும் உதவுகிறது. இது G ஆக்க்ஷன் F ஆக்க்ஷன் எனும் இரு வகைகளில் உருவாகிறது.

actified : ஆக்டிஃபடு : சியூடோ ஃபெட்ரின், டிரிப் ரோலின் ஆகியவை அடங்கிய மருந்து.

acting out : துன்ப உணர்வுக் குறைப்பு : உணர்ச்சிவயப்பட்ட மனவேதனையைக் குறைத்தல், இதில் முந்தைய மனக்குழப்பங்கள், மனப்போக்குகள் மூலம் தன்னையறியாமல் ஏற்பட்டு விட்ட தடுமாற்றமான அல்லது மூர்க்கத்தனமான நடத்தையிலிருந்து நோயாளி விடுவிக்கப் படுகிறார்.

actinic : கதிரியக்க : 'வேதியியல்' விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.

கதிரியக்கத் தீப்புண்கள் : புற ஊதாக் கதிர்களின் பாதிப்பால் ஏற்படும் கதிரியக்கத் தீப்புண்கள்.

கதிரியக்கப் புற்றுநோய் : சூரியக் கதிர்களால் தோலில் தோன்றும் புற்றுநோய். இது பொதுவாக தலையிலும் கழுத்திலும் காணப்படும்.

கதிரியக்கத் தோலழற்சி : கதிரியக்கத்தால் தோல் அழற்சியுறல்.