பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

koilonychia

622

krait


koilonychia : கரண்டி நகம்; கூண்டு நகம்; குழி நகம் : அயச் சத்துக்குறைபாடு காரணமாக உண்டாகும் சோகையினால் ஏற்படும் கரண்டி வடிவ நகங்கள்.

konakion : கோனாக்கியான் : ஃபைட்டோமினாடியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

koplik's spots : வாய் வெண் புள்ளி : தட்டம்மையின் தொடக்க நாட்களில் வாயினுள் எற்படும் சிறிய வெண் புள்ளிகள்.

korsakoff psychosis syndrome : போதைப் பைத்தியம் : மதுபானப் போதையினால் மனத்தளர்ச்சி உண்டாகி ஏற்படும் பைத்தியம். இந்நோய் கண்டவர் தன்னுணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருப்பார். ஆனால் அண்மை நிகழ்ச்சிகள் மறந்துபோகும்.

koviocortex : மூளை மேலுறை : அடர்த்தியான நட்சத்திர வடிவ உயிரணுக்கள் அடங்கிய மூளை மேலுறை.

kopan's needle : கோப்பன் ஊசி : மார்பகப் புற்று இருக்குமிடத்தைக் கண்டறிவதற்கான நீண்ட உடல்திசு ஆய்வு ஊசி.

Koplick spots : கோப்ளிக் புள்ளிகள் : கன்னம் மற்றும் நாக்கு சவ்வின் மையத்திலுள்ள நுண்ணிய வெண்புள்ளியுடன் கூடிய சிறிய பிரகாசமான சிவப்புப்புள்ளிகள். இது கட்டி தோன்றுவதற்கு முன்பு தட்டம்மை நோயில் காணப்படும். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஹென்றி கோப்ளிக் இதனைக் விவரித்துக் கூறினார்.

kraurosis : தேய்மம்.

kraurosis, vulvae : தேய்வகம்.

Korean haemorrhagic fever : கொரியாக் குருதிப் போக்குக் காய்ச்சல் : “ஹான்டாவைரஸ்" என்ற கிருமியினால் உண்டாகும் சிறுநீரக நோயுடன் கூடிய குருதிப் போக்குக் காய்ச்சல்.

krabbe disease : மைய நரம்பு மண்டல நலிவு : மைய நரம்பு மண்டலம் நலிவுறுவதால் உண்டாகும் மரபு நோய். இது மனக்கோளாறு நிலையுடன் தொடர்புடையது. கிராபே விவரித்தது.

krukenberg tumour : கருப்பைக் கட்டி : பெண் கருப்பையில் உண் டாகும் இரண்டாம் நிலை உக்கிரமான கட்டி முதல் நிலை கட்டி இரைப்பையில் உண்டாகிறது.

krait : வங்காள நச்சுப் பாம்பு : வங்காளத்தில் காணப்படம் கடும் நச்சு உடைய நச்சுப் பாம்புகளில் ஒன்று. இதன் உடலில் வெள்ளைப் பட்டைகள் இருக்கும். உடலிலுள்ள முதுகு தண்டுச் செதில்கள் அறுகோண வடிவில் இருக்கும். தலையும், கீழ்த்தாடையின் பக்கங்களும்