பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

labyrinthectomy

628

lachrymatism


labyrinthectomy : காதுஉட்சுருள் அறுவை மருத்துவம் : காதின் உட்சுருள் வளைப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

labyrinthitis : உட்காது அழற்சி : உட்காதிலுள்ள ஒன்றோடொன்று இணைந்துள்ள திரவம் நிரம்பிய மூன்று அறைகளில் வீக்கம் ஏற்படுதல். இதில் திடீர் தலைச் சுற்றல். இது அசைவினால் கடுமையாகும். இது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் வரை நீடிக்கும். இதனுடன் சேர்ந்து குமட்டலும் வாந்தியும் உண்டாகும்.

lacerated wound : கீறல் காயம்; சிராய்ப்பு; குதறிய காயம் : திசுக்கள் கிழிந்து ஏற்படும் சிராய்ப்புக் காயம்.

laceration : கிழிகாயம்.

lacklustre : மயங்கலான; கண்ணொலி மங்கிய.

lachrymal canal : கண்ணிர்க்கால்.

lachrymal duct : கண்ணிர்க் குழாய் : கண்ணின் உள்மூலையிலிருந்து கண்ணிரை மூக்கடிக்குக் கொணரும் நரம்புக் குழாய்.

lachrymal sac : கண்ணிர்ப்பை.

lachrymal vase : கண்ணிர்க்கலம்.

lachrymals : கண்ணிர் உறுப்புகள் : கண்ணிர்த் தொடர்புடைய உறுப்புகள். கண்ணிர்ச்சுரப்பி, கண்ணிர்க்கால் முதலியவற்றின் தொகுதி.

lacrimal : கண்ணிர் சார்ந்த.

lacrimal, lachrymal, lacrymal : கண்ணீர்க்கலம் சார்ந்த; கண்ணீரக.

lacrimation : கண்ணீர் வடிதல்; கண்ணீர்ச் சுரப்பு; கண்ணீர்ச் சொறிதல் : அழுகையினால் கண்ணிர் வடிதல்.

lachrymal gland : கண்ணீர்ச் சுரப்பி : கண்கடையிலுள்ள கண்ணிர்ச் சுரப்பி.

கண்ணீர்ச் சுரப்பி

lachrymal sec : கண்ணீர்ப் பை.

lachrymal vase : கண்ணீர் கலம்.

lachrymals : கண்ணிர் உறுப்புக்கள்.

lachrymatism : கண்ணிர்ரொழுக்கு.