பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

actinic dermatoses

62

actinomycetaceae


actinic dermatoses : ஒளிக் கதிர்த்தோல் அழற்சி : தோலின் புறவூதா ஒளிபட்டால் இயல்புக்கு மீறி எளிதில் புண்படக் கூடியதாக இருத்தல்.

actinism : ஒளிக்கதிர் வேதியியல் விளைவு : ஒளிக்கதிரினால், முக்கியமாகப் புறவூதா ஒளிக் கதிரினால் உண்டாகும் வேதியியல் விளைவு.

actino : ஆக்டினோ : இணைப்புச் சொல். ஒளிக்கதிர் அல்லது கதிரியக்கத்தோடு தொடர்புடைய ஒர் இணைப்புச் சொல்.

actinometer : ஆக்டினோமீட்டர் : ஒளி - வெப்பமானி, ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி.

actinobacillus : ஆக்டினோபே சில்லஸ் : வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பாதிக்கின்ற மிகச்சிறிய பாக்டீரியா வகை. (நுண்ணுயிரி). சிசோமை சீட்ஸ் இடைப்பிரிவைச் சார்ந்த காக்கோபேசில்லஸ் நுண்ணுயிரிகள். இவை மிக அரிதாக மனிதர்களையும் தாக்கும்.

actinobiology : ஒளிக் கதிர் உயிரியல்; ஒளிய உயிரியல் : உயிர் வாழும் உயிரிகளின் மீது ஒளிக்கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராய்தல்.

actinodermatitis : கதிரியக்க தோலழற்சி : கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை.

actinogenics : கதிர் வீச்சியல்.

actinolite : ஒளியில் தன்மை மாறும் பொருள்.

actinology : ஒளி இயல்;ஒளிக் கதிர் இயல் : கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை.

actinomadura : ஆக்டினோமதுரா, மதுரா பூஞ்சைக் காளான் நோய் : (மதுரா கால்) மது ரெல்லா பூஞ்சைக் காளான் இதனை ஏற்படுத்துகிறது. இந்நோயின் போது நோயாளிக்குக் கால் வீங்கிவிடும்; பல புழைகள் சீழ் வழிந்த நிலையில் காணப்படும். கீழ்த்தோல் திசுக்கள், வெண்குருணைகள், ஊநீர், தோலடித் திசுக்கள் ஆகியவை அழுகிய நிலையில் வெளியேறும். சீழில் பூஞ்சைக் காளான்கள் வெளியேறும்.

actinomyces : கதிர்வீச்சு பாக்டீரியா : ஒளிக்கதிர் வீசும் பூரண வலையைக் கொண்ட பூஞ்சனம் போன்ற ஒட்டுண்னிப் பாக்டீரியா. இதிலிருந்து பல்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

actinomycetaceae : ஆக்டினோமைசீடேசியே : பாக்டீரியா (நுண்ணுயிரி) வகை. ஆக்டினோமைசிடாலிஸ், மைகோ பேக்டீரியாசியோ, நாக் கார்டியேசியே, டெர்மட்டோபிலே