பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lactalbumin

629

lacuna


lactalbumin : பால் புரதம்L : எளிதில் சீரணமாகக்கூடிய இரு பால் புரதங்களில் ஒன்று.

lactagogue : பால் பெருக்கு; பால் சுரப்பு மருந்து; பால் சுரப்புப் பூக்கி : பால் சுரப்பைத் துண்டுவதற்கு கொடுக்கப்படும் மருந்து.

lactase : லாக்டேஸ் : குடல் நீரில் காணப்படும் பால் சர்க்கரையை (லாக்டோஸ்) பழச் சர்க்கரையாகவும் (dextrose) கிளாக்டோசாகவும் மாற்றுகிற செரிமானப் பொருள்.

lactation : 1. பால் சுரப்பு; பாலூட்டல் : தாயின் மார்பகத்திலிருந்து பால் சுரத்தல், 2. பால் கொடுத்தல் : குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல்.

lacteals : பால் நாளங்கள்; குடற் பால் குழாய்; பாற் குழல் : குடல் நீர்மங்களால் உண்டாக்கப்படும் பால் போன்ற கணையம். பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்லும் நாளங்கள்.

lactic : பால் சார்ந்த.

lactic acid : லாக்டிக் அமிலம் : பாலை புளிக்கச் செய்யும் அமிலம்.

lactiferous : பால் சுரப்பிக்கிற; பாலேந்தி : பால்போன்ற நீர் மத்தை உண்டாக்குகிற.

lactoferrin : லேக்டோஃபெரின் : பாலிலும், பலமுனைக் கரு வெள்ளணுக்களிலும் காணப்படும் தனி வகையல்லாதப் புரதம். இது இரத்தத்திலுள்ள அயத்துடன் இணையும்.

lactogenic : பால்சுரப்புத் தூண்டல்; பாலூக்கி; பால்சுரப்பூக்கி; பால் பெருக்கி.

lactometer : பால் மானி : பாலின் ஒப்பு அடர்த்தியை அளவிடு வதற்கான கருவி.

lacto-protein : பால் புரதம் : பாலில் உள்ள வெண்கரும் பொருளாகிய புரதம்.

lactose : பாலினிமம்; பால் சர்க்கரை : பாலில் உள்ள சர்க்கரை, குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கான நீர்த்த பசும்பாலில் கார் போஹைட்ரேட்டை அதிகமாக்குவதற்கு இது சேர்க்கப்படுகிறது.

tactosuria : சிறுநீர்ச் சர்க்கரை; பால் சிறுநீர்; நீரிழிவு.

lactulose : லேக்டுலோஸ் : 'டை சாக்கரைடு' என்ற ஒருவகைச் செயற்கைச் சர்க்கரை. இது மனிதர்களிடம் நீரால் பகுபடுவதில்லை. இதனை மனிதர் ஈர்த்துக் கொள்வதுமில்லை. இது பெருங்குடலிலுள்ள பாக் டீரியாவினால் வளர்சிதை மாற்றம் செய்யப்படுகிறது.

lacuna : இடைக் குழிவு; இடை வெளி; சிறுபள்ளம்; வெற்றுக் குழி : எலும்பு, தசை முதலியவற்றி லுள்ள இடைக்குழிவான பகுதி.