பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lad

630

Langerhans'cell


lad : சிறுவன் இளைஞன்.

laevulose, levulose : பழச்சர்க்கரை : பல்வேறு இனிப்புக் கனிகளில் காணப்படும் சர்க்கரைப் பொருள். தேன், கரும்பு ஆகியவற்றில் உள்ள சர்க்கரை இதில் அடங்கும்.

Lafora-body disease : லாஃபோரா திரள் நோய் : தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெயரால் அழைக்கப் படுகிறது.

lag : சுணக்கம்; தடை.

logophthalmos : இமைச் சுணக்கம்.

lame : முடம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளில் ஏற்படும் ஊனம் பெரும்பாலும் கால் அல்லது பாதத்தில் ஏற்படும். இது இயல்பான நடமாட்டத்தைப் பாதிக்கும்.

lamella : தாள் படலம்; நுண் தகடு; செதிள் அடுக்கு; தசைச் சவ்வு; எலும்புத்தகடு.

lamina : மென்தகடு; எலும்புப் பட்டை; தகடு : எலும்பினாலான தாள் படலம்; சவ்வு.

laminagram : உடற்பகுதி ஊடுகதிர்ப் படம் : உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஊடு கதிர்ப்படம். இது ஊடுகதிர் வரைபடம் மூலம் எடுக்கப் படுகிறது.

laminagraph : ஊடுகதிர் வரைபடம் : உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நுட்பங்களைக் காட்டும் ஊடுகதிர்ப் பட நுட்ப முறை.

laminar flow : வாயுத் துகள் இயக்கம் : குழாயின் கவர்களுக்கு இணையாகச் செல்லும் கோடுகளின் நெடுகிலுமுள்ள வாயுத் துகள்களின் தடங்கலற்ற இயக்கம்.

laminectomy : மென்தகடு அறுவை மருத்துவம்; தகடெடுப்பு; மென் தகடு நீக்கம் : மென்தகட்டினை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.

lamprene : லாம்ப்ரென் : குளோஃபாசிமின் என்ற மருந்தின் பெயர்.

lancet : சூரிக் கத்தி; குறுங்கத்தி : அறுவை மருத்துவக்குப் பயன் படும் ஒரு சிறிய, கூர்மையான இருபக்கமும் கூர்விளிம்புடைய ஒரு கத்தி.

Langerhans" cell : லாங்கர்ஹான்ஸ் உயிரணு : இது ஒர் ஒற் றைக்கரு உயிரணு. இது, இழைமைப் புண்களைப் பரப்பும் மேல் தோலிலுள்ள சிறிய வெள்ளைக் குருதியணுக்களுக்குக் காப்பு மூலங்களை அளிக்கிறது. ஜெர்மன் நோயியலறிஞர்