பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Langerhans" cell gran..

631

laparotomy


பால் லாங்கர்ஹான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Langerhans' cell granuloma : லாங்கர்ஹான்ஸ் உயிரணுக் கட்டி : சிவப்பூதாச்சாய உயிரணுக் கட்டி இது உட்குழிவு நுரையீரல் நோய், நுரையீரல் உறை காற்று நோய் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.

Lange's test : லாங் சோதனை : நரம்புக் கிரந்தி நோயைக் கண் டறிவதற்கான ஒரு சோதனை. கரைத்தக்கைத் தங்கக் கரைசல் மூளை-முது கந்தண்டுவடத் திரவம் இரண்டின் தங்க வீழ்படிவின் அளவினைப் பொறுத்து இது கண்டறியப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் கார்ல்லாங் பெயரால் அழைக்கப்படுகிறது.

Langhans' giant cell : லாங்ன்ஸ் அரக்க உயிரணு : உருகிக் கலந்த தோலிழைம உயிரணுக்கள் அடங்கிய ஒர் அரக்க உயிரணு, இதில் ஏராளமான கருமையங்கள், திசுப்பாய்மத்தைச் சுற்றி உள்ள மாலைபோல் அமைந்து இருக்கும். இந்த உயிரணுக்களைக் கொண்டு காச நோயைக் கண்டறியலாம். சுவிஸ் நோயியல் அறிஞர் டி.லாங்கான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

lanolin : ஆட்டுக் கம்பளச் சத்து : தைலவகை மூலப் பொருளான ஆட்டுக் கம்பளச் சத்து. ஆட்டு கம்பளத்திலிருந்து எடுக்கப்படும் கொழுப்புப் பொருள். இது களிம்புப் பொருளாகப் பயன்படுகிறது.

lanoxin : லானோக்சின் : டை கோக்சின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

lanugo : மென் முடி.

laparectomy : குடற்பகுதி அறுவை.

lapatocele : முன்னோக்கிப் பிதுக்கம்.

laparotomy : வயிற்றசை ஆய்வு.

laparoscope : லேப்ரோஸ்கோப் : அடிவயிற்று உட்குழிவிலுள்ள உள்ளுறுப்புகளை பார்த்து ஆராய்வதற்குப் பயன்படும் நுனியில் ஒரு நுண்ணிய ஒளிப்பதிவுக் கருவியை உடைய பெரிட்டோனியோஸ்கோப் என்னும் கருவி.

laparoscopy : லேப்ரோஸ்கோப் ஆய்வு : லேப்ரோஸ்கோப் கரு வியைப் பயன்படுத்தி அடிவயிற்று உட்குழிவின் உட்பகுதியை ஆராய்தல். இதில் ஒரு சிறிய கீறல் மூலம் அடி வயிற்றில் லேப்ரோஸ்கோப் செருகப் பட்டு, உருக்காட்சி தொலை காட்சித் திரையில் காட்டப்படுகிறது.

laparotomy : அடிவயிற்று அறுவை; உதரத் திறப்பு; வயிற்று திறப்பு : அடிவயிற்றின் புறத் தோட்டின் அறுவை.