பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Leishmania

leprous


அறிஞர் டோனோவான் இருவரும் இந்தியாவில் சென்னையில் பணியாற்றிய போது இதனை விவரித்துக் கூறினர்

Leishmania : லெயிஷ்மானியா : நுண்ணிய ஓரணுக்கசையிழை. கசையிழை அழற்சிக்குக் காரணமான சிறுபெண்பூச்சிக் கடியினால் பரவுகிறது.

lenitive : நோவகற்று மருந்து : பிணி தணிக்கும் மருந்து.

lens : வில்லை; விழி வில்லை; விழியாடி; கண் வில்லை : கண் னின் படிக நீர்மம் பளிக்கு நீர் மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுவிக்கும் அமைவு.

leno, cataractous : புரைவில்லை.

lentectomy : கண் கண்ணாடிவில்லை அகற்றுதல் : கண்ணின் கண்ணாடிவில்லையை அகற்றுதல்.

lenticular : வில்லை வடிவான : கண்ணின் விழிவில்லை வடிவான,

lentigines : தோல் பழுப்புப்புள்ளி : லிப்போஃபஸ்ஸின் திரட்சி கார ணமாகக் கைகளின் பின்புறமுள்ள முதிர்ந்த தோலில் காணப்படும் தட்டையான பழுப்பு நிறப் புள்ளி.

lentigo : தோல் கரும்புள்ளி : லிப்போஃபஸ்ஸின் அளவுக்கு அதிகமாகப் படிவதன் காரணமாக தோலில் ஒழுங்கான கரையுடன் கூடிய பழுப்பு நிறப்புள்ளி. இது சூரியவெளிச்சம் படுவதால் வெளிப்படுகிறது.

lentil : அவரை விதை : புரதம் பெருமளவு உள்ள அவரை விதை. இது மலிவானது ஊட்டச்சத்து நிறைந்தது.

lentizol : லென்டிசோல் : அமிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

leontiasis : சிங்கமுகத் தோற்றம்; சிங்கமுகம்; சிங்கத் தலை; பெருந் தலை : முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம் போல் தோற்றம் உண்டாக்கும் ஒரு வகை நோய்.

leper : தொழுநோயர்.

leprosy : தொழுநோய்.

leprologist : தொழுநோய் வல்லுநர்; தொழுநோயியலார் : தொழு நோய் பற்றிய ஆராய்ச்சியிலும் மருத்துவத்திலும் வல்லுநர்.

leprology : தொழு நோயியல் : தொழுநோய் பற்றியும், அதற்கான மருத்துவம் குறித்தும் ஆராயும் இயல்.

leproma : குருணைக்கட்டிக் கரணை : மைக்கோபாக்டீரிய லெப்ரே என்ற கிருமியினால் உண்டாகும் குருணைக் கட்டி கரணை. .

lepromin : குட்டத் திசுப் புரதம்.

leprosavium : தொழு நோயகம்.

leprous : தொழுநோய் குறித்த; குட்டநோய் பற்றிய.