பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leptin

637

leschMyhan disease


leptin : லெப்டின் : கொழுப்புத் திசுவினால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை இயக்குநீர். இது பசியை அடக்குவதற்கான கீழ்த்தள மட்டத்தில் செயற்படுகிறது.

leptocephalus : நீள்மண்டை : இயல்பு கடந்து செங்குத்தாக நீண்ட குறுகிய மண்டையோடு.

leptocyte : மென்சிவப்புக் குருதியணு : இயல்புக்கு மீறிய மெல்லிய, தட்டையான சிவப்புக் குருதியணு. இதில் மைய நிறமிப் பகுதி எருதின் கண்போல் அமைந்திருக்கும். இதனை ஒரு தெளிவான மண்டலமும், நிறமி விளிம்பும் சூழ்ந்திருக்கும். இதனை "மெக்சிக்கோ தொப்பி" உயிரணு என்றும் கூறுவர்.

leptocytosis : சிவப்பணுக் குறைபாடு; மெலியணுமயம் : மெல்லிய, தட்டையான, சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தச் சிவப்பணுக்கள். இது இரத்தச் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் தாலசேமியா என்னும் நோயின் அறிகுறியாகும்.

leptomeninges : மூளை இழைம உறை : மூளையையும், தண்டு வடத்தையும் முடியிருக்கும் மிருதுவான மென்மையா இழைமை உறை.

leptomeningitis : மூளைச் சவ்வு உறை வீக்கம்; மெல்லுறையழற்சி : மூளையை அல்லது தண்டு வடத்தை முடியுள்ள உள் சவ்வுகள் வீங்குதல்.

Leptospira : கொக்கிப்பாக்டீரியா : டிரப்போனமேட்டேசியே குடும் பத்தைச் சேர்ந்த மெல்லிய, சுருள் சுருளான, கொக்கி முனையுடைய பாக்டீரியா. இது 240 பொதுக் காப்பு மூலங்களையும், 23 ஊனீர் உறைகளையும் கொண்டிருக்கும்.

lesbian : ஒருபால்புணர்ச்சிப் பெண் : ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்கள்.

lesbianism : பெண் ஒரு பாற்புணர்ச்சி; பெண்ணிடைப் பாலுறவு; பெண் தன் இனக்காமம் : பெண்கள் ஒருபாற் புணர்ச்சியில் ஈடுபடுதல்.

lesbian vice : பெண்கள் செயற்கை முயக்கம் : பெண்களிடையிலான செயற்கைப் புணர்ச்சி.

leschNyhan disease : யூரிக் அமில மிகை உற்பத்தி : யூரிக் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது ஒரு பிறவிக் கோளாறு. இதனால் மூளைக்குச் சேதம் உண்டாகலாம். இந் நோய் கண்டவர்கள் தங்களையே அழித்துக் கொள்ளத் தூண்டப்படுவார்கள். கடைவாயைக் கடித்தல். உதடுகளைக் கடித்தல், விரல்களைக் கடித்தல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.