பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ligate

642

limbus


தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு.

ligate : குருதி நாளக் கட்டு; கட்டுதல் : அறுவை மருத்துவத்தின் போது இரத்தம் வடியாமல் குருதி நாளத்தை கட்டி இறுக்குதல்.

ligation : குருதிக் கட்டுமானம்; பிணைத்தல்; குருதி நாளக் கட்டு : அறுவை மருத்துவத்தின்போது குருதி வடிவதைத் தடுப்பதற்கு குருதி நாளத்தைக் கட்டி இறுக்குதல்.

ligature : கட்டுப்பிணைப்பு; கட்டு இழை; கட்டுப் பொருள்; முடிச்சு; கட்டுநார்; பிணைப்பு : குருதி வடிவதை தடுப்பதற்கு அல்லது வீக்கம் தணிப்பதற்குக் கட்டிப் பிணைத்தல்.

lightening : கவலைத் திணிப்பு; அழுத்தக் குறைவு; தாய்மை வயிற்றழுத்தக் குறைவ;: சூல் தளர்ச்சி : உள்ளத்தின் கவலையைத் தவிர்த்தல், மனக்கவலை தீரப் பெறுதல்.

lightening : புளுக்குறைவு : கர்ப்பிணித் தாய்மார்களை கடைசி வாரங்களில் இடுப்புக் குழியினுள் கருவுயிரின் தலை இறங்குவதன் காரணமாகத் தாய்க்கு பளு குறைந்தாக உண்டாகும் உணர்வு.

lightning pains : மின்னல் வலி; மின்னல் குத்து வலி : உடல் உறுப்புகளில், குறிப்பாகக் கீழ் உறப்புகளில் மின்னல் வெட்டுப் போல் திடீரென வலிஉண்டாதல்,

light reflex : ஒளித்தூண்டல் : பார்வை நரம்பு மற்றும் கண்ணியக்க நரம்பிலுள்ள புறநோக்கு நரம்பு, கண்ணியக்க நரம்பிலுள்ள கருமைய மற்றும் புற நோக்கு இழைமங்கள் ஆகியவை ஒளித்தூண்டல் அவற்றிலுள்ள மறிவினை வளைவரையைப் பொறுத்ததாக இருக்கும்.

ligneous thyroiditis : அகக்காழ் கேடயச் சுரப்பி அழற்சி : இதனை ரைடல் நோய் என்றும் கூறுவர். இது கழலை, கண்டமாலை என்றும் அழைக்கப்படும்.இதில் குரல்வளைச் சுரப்பி கல் போல் கடினமாக வீங்கியிருக்கும். இது இருபாலாரிடமும் இளைமைப் பருவத்தில் உண்டாகும்

lignocaine : லிக்னோக்கேய்ன் : உறுப்பெல்லை உணர்வு நீக்கும் மருந்து. இது புரோக்கேய்னை விட ஆற்றல் வாய்ந்தது; அதிக நேரம் செயற்படக் கூடியது.

limb : உறுப்பு; அங்கம்.

limb, artificial : செயற்கை உறுப்பு.

limb, lower : காலுறுப்பு.

limb, upper : மேலுயுறுப்பு. கையுறுப்பு.

limbic system : மூளை உணர்வு மண்டலம் : உணர்ச்சிளையும், உள்ளார்ந்த உந்துணர்வுகளையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி.

fimbus : விழிச் சந்தி.