பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

live birth

647

Lobstein's disease


live birth : உயிர்வாழ் பிறப்பு : கருவுயிர்த்த ஒரு பொருள் தன் தாயிடமிருந்து முழுமையாக வெளியேற்றப்படுதல் அல்லது வெளியில் எடுக்கப்படுதல். இந்தப் பொருள் தனியே வெளிவந்ததும் சுவாசிக்கிறது அல்லது உயிர்வாழ்வின் பிற அறிகுறிகளைக் காட்டுகிறது.

liver : ஈரல் (ஈரல் குலை) : உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு. இதன் எடை வயதுவந்தவர்களிடம் 1-2-3-கி கிராம் என்று வேறுபடும். உடலின் எடையில் ஏறத்தாழ முப்பதில் ஒரு பகுதியாக இருக்கும். இது, அடி வயிற்றுக் குழியின் வலது மேற் பகுதியில் அமைந்திருக்கும்.

live vaccine : உயிருள்ள அம்மைப் பால் : உயிருள்ள, நுண்ணுயிராக்கிய உயிரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அம்மைப்பால். பி.சி.ஜி, தட்டம்மை, இளம்பிள்ளை வாத உயிரிகள் இதற்குச் சான்று. இந்த உயிரிகள் முழுமையாக முதிர்வடைந்த நோய்களை உண்டாக்கும் திறனை இழந்து, அவற்றின் நோய்த் தடைக்காப்புத் தன்மையை மட்டும் கொண்டிருக்கின்றன.

livid : வெளிர் நீலம்; கன்றிய நிலை : போதிய ஆக்சிஜனேற்றம் இல்லாமையால் கன்றிப்போய் வெளிறிய நீலநிறமாதல்.

LMP : கடைசி மாதவிடாய்க் காலம்.

lobe : தொங்குசதை (மடல்) : தட்டை வட்டாகத் தொங்கும் பகுதி.

lobe of ear : புறக்காது மடல்.

lobe, frontal : முன்னுச்சி மடல்.

lobe, middle : நடுமடல்.

lobe, occipital : பின்னுச்சி மடல்.

lobe, parietal : பக்க மடல்.

lobe, temporal : பொட்டு மடல்.

lobectomy : மடல் நீக்கம்.

pulmonary : நுரையீரல் மடல் நீக்கம்.

lobotomy : மடல் குறைப்பு.

Lobstein's disease : லாப்ஸ்டெயின் நோய் : எலும்பு