பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lobule

648

loop


வளர்ச்சிக் குறைபாட்டுநோய். ஜெர்மன் அறுவை மருத்துவம் வல்லுநர் ஜோகான் லாப்ஸ்டெயின் பெயரால் அழைக்கப்படுகிறது.

lobule : சிறுஇதழ்; நுண்ணறை; நுண்மடல்; சிறுமடல் : காதின் சிறு மடல்.

localization : உற்றிடப் படுத்தல்.

localize : உறுப்பெல்லைக் குட்படுத்து; நிலைப்படுத்தம்; பரவாத நிலை : நோய் வகையில் உறுப்பெல்லைக் குட்படுத்துதல்; உடல் முழுவதும் பரவாது செய்தல்.

location : உற்றிடம்:

lochia : கருப்பை வாய்க் கசிவு; பேற்றுக்கும் பின்சுரப்பு; பேற்றுப் போக்கு ஈன் கசிவு : பிள்ளைப் பேற்றின்போது கருப்பை வாய் குழாயிலிருந்து (யோனிக்குழாய்) வெளியேறும் கசிவு.

lock jaw : வாய்ப்பூட்டு நோய்; தாடைப் பிடிப்பு; வாய்பிடிப்பு : கீழ்த்தாடையை உயர்த்தும் தசைகளில் ஏற்படும் வலியுடன் கூடிய பிடிப்பு. இதில், நரம் பிசிவு நோயில் காணப்படுவது போன்று தாடையில் தசை விறைப்பு எற்படும்.

locomotion : இடப்பெயர்ச்சி.

locomotor : புடைபெயர்வு; இயக்கத் தன்மை; ஊறுவிசை : நரம்புகள், முட்டுகள் ஓரிடத்தில் நிலைத்திராமல் இடம் பெயர்தல்.

loculated : பள்ளக் குழிகள்; நுண் ணளவுப் பகுதி; பொந்திய : பல் வேறுபள்ளக்குழிகளாகப் பகுத்திருத்தல்.

Loffler's syndrome : லாஃப்லெர் நோய் : நுரையீரல்குருதிச் செவ் வணு நலிவு, இருமல், நுரையீரலில் தற்காலிக மழுப்பம் போன்ற உக்கிரமற்ற கோளாறு. சுவிஸ் மருத்துவ அறிஞர் வில்ஸெல்ம் லாஃப்லெர் பெயரால் அழைக்கப்படுகிறது.

logopedics : பேச்சு நோயியல் : பேச்சுக்கோளாறகளை ஆராய்ந்து மருத்துவமளிப்பது தொடர்பான அறிவியல்.

loin : அரை(இடுப்பு); விலா; இடை : போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி.

lomotil : லோமோட்டில் : டைஃபி னாக்சிலேட், ஹைட்ரோக் குளோரைடு, அட்ராப்பின் சல்ஃபேட் ஆகியவை கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப்பெயர். இது வயிற்றுப் போக்குக்குக் கொடுக்கப் படுகிறது.

longitudinal : நீள்பாங்கான.'

Loriten : லோனிட்டென் : மினோக் சிடில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

loop : வளையம்.