பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

loose body

649

low back pain


loose body : எலும்பு மூட்டு அழற்சி : எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர்.

Looser's zone : தளர்ச்சி மண்டலம் : சுண்ணமகற்றிய, ஒடுங்கி நீண்ட மண்டலங்களை இயல்பு மீறிக் காட்டும் ஊடுகதிர் மண்டலம். இது ஒரு சீர்மையாகவும், மூளை மேலுறைக்குச் செங்குத்தாகவும் அமைந்து இருக்கும்.

loperamide : லோப்பெராமைட் : வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்து.

lorazepam : லோரஸ்பாம் : டை யாஸ்பாம் போன்றதொரு நோவகற்றும் மருந்து.

lordoscoliosis : தண்டெலும்பு வளைவு : தண்டெலும்பின் பின் முன் நோக்கிய வளைவு.

lordosis : தண்டெலும்பு வளைவு; முதுகெலும்பு முன் குவியம்; நிமிர் முதுகு; முன்புடை முதுகு : இடுப்புப் பகுதித் தண்டெலும்பு முன்புறமாகப் புறங்குவிந்து வளைந்திருத்தல்.

Loroxane : லோரக்சேன் : காமா பென்சீன் எத்திட்ரோக்குளோரைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

loss : இழப்பு.

lotion : கழுவு நீர்மம் : உடலில் புறப் பூச்சுக்கான மருந்து கலந்த திரவக் கழுவு நீர்மம்.

lotio rubra : லோஷியோ ருப்ரா : சிவப்பு நிறக்கழுவு நீர்மம்.

loupe : பெருக்கு வில்லை; உருப்பெருக்காடி வளையம்; ஒளி பெருக்கக் குவி ஆடி; இரு கண் உருப்பெருக்கி : கண், காது, நோயியலில் பயன்படுத்தப்படும். உருப்பெருக்காடி அமைக்கப்பட்டு தலையில் சொருகிக் கொண்ட திகப்பகுதியைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வளையம்.

louse : பேன் : ஒட்டுயிர்ப்பூச்சி இதன் ஒரு வகை உடலில் காணப்படும்; இன்னொரு வகை மயிரில் காணப்படும். மூன்றாவது வகை இனப் பெருக்க உறுப்புகளைச் சுற்றி உள்ள மயிரில் காணப்படும். இரண்டாவது வகைப் பேன் காரணமாகச் ஜன்னிக்காய்ச்சல் பரவுகிறது.

louse head : தலைப்பேன்.

low back pain : கீழ் முதுகு வலி : தண்டெலும்புகளிடையிலான தகட்டின் பிற்பகுதிப் பக்கக்கிளை இடப்பெயர்வு காரணமாக ஏற்படும் இடுப்பு வாத நோய். இது முதுகுத் தண்டின் நரம்பு வேருக்குப் பரவி அடுப்பு நரம்பு வலி உண்டாகக் கூடும்.