பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Lyme disease

652

lymphatic vessel


டெட்ராசைக்கிளின் போன்று செயற்படக்கூடியது.

Lyme disease : லைம் நோய் : பன்முகக்கோச நோய். இது உண்ணி கடிப்பதால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் லைமில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

lymph : நிணநீர்; வடிநீர் : புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் பசுவின் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப் படும் சீநீர் வகை. இது ஒளி ஊடுவருவக்கூடியது; நிறமின்றி அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

lymphadenectomy : நிணநீர்க் கரணை மருத்துவம்; வடிநீர்க் கோள வெடுப்பு : நிணநீர்க் கரணையை அறுவை மருத்தவம் மூலம் அகற்றுதல்.

lymphadenitis : நிணக்கணு வழற்சி.

lymphadenopathy : நிணநீர்க் கரணை வீக்கம்; வடி நீர்க்கோள நோய்.

lymphagiectasis : நிணநீர் நாளம் விரிவடைதல்; வடிநீர்க்குழல் விரிவு.

lymphangioma : நிணநீர் நாள கட்டி; வடிநீர்க் குழல் புத்து.

lymphangiogram : நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் : நிணநீர் நாளத்தின் ஊடுகதிர்ப்படம்.

lymphangiography : நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் எடுத்தல் : ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்துவதைத் தொடர்ந்து நிணநீர் நாள ஊடுகதிர்ப்படம் எடுத்தல்.

lymphangiolemyomatosis (LAM) : நிணநீர்த் தமனி நோய் : மிக அரிதாகப் பீடிக்கும் தமனி நோய். இதனால், மிருதுவான தசை போன்ற உயிரணுக்கள் அளவுக்குமீறி பரவும். இதனால், காற்றுப்புழைகள், நிணநீர் நாளங்கள் இரத்த நாளங்கள் ஆகியவற்றில் தடை ஏற்படும். இது, குழந்தைபெறும் வயது உடைய இளம் பெண்களைப் பாதிக்கும்.

lymphanigoplasty : நிணநீர் நாள மாற்று மருத்துவம்; வடிநீர்க் குழல் அமைப்பு : நிணநீர் நாளங்களுக்குப் பதிலாக செயற்கை நாளங்களைப் பொருத்துதல்.

lymphagnitis : நிணநீர் நாள அழற்சி; நிணக் குழலழற்சி : நிணநீர் நாளங்கள் அல்லது நாளங்கள் வீக்கமடைதல்

lymphagitis : நிணநீர் நாள வீக்கம்; வடிநீர்க் குழல் அழற்சி.

lymphatic : நிணநீர் சார்ந்த.

lymphatic gland : நிணநீர் சுரப்பி.

lymphatic : நிண.

lymphatic vessel : நிணநீர் நாளம்.