பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



M

maceration : மென்பதமாக்கல்; தோல் மெலிவு; தோல் மென்மை; மென் பதன் : தோலின் மரத்துப் போன படுகையை நீர் நயப்பு மூலம் மென்மையாக்குதல்.

mackenrodt's ligaments : குறுக்கு முளைத் தசைநார் : கருப்பையைத் தாங்கி நிற்கும் முக்கியமானத் தசைநார்கள் குறுக்கீடாக அமைந்திருத்தல்.

machine : கருவி;பொறி; எந்திரம்.

machine, heart lung : செயற்கை இதய நுரையீரல்.

macrencephaly : அளவுமீறிய மூளை : மூளை இயல்புமீறி பெரிய அளவில் இருத்தல்.

macroaggregated : ஓரகத் தனிமக் கடத்தி : இதய அழுத்தப் பதிவு உருக்காட்சிக்காக ஊடுகதிர் ஒரகத் தனிமங்களுக்கான கடத்தியாகப் பயன்படுத்தப்படும் வெண்புரதம்.

macroamylase : உமிழ்நீர் அமிலோஸ் : கற்றோட்டமாகச் செல்லும் குருதிநீர் அமிலோசின் ஒர் உமிழ்நீர்வகை. இது பல்வேறு அதிமூலக்கூறு எடை குருதி நீர்ப்புரதங்களுடன் கலக்கிறது.

macrocardius : அதீத இதய நோயாளி : பிறவி இதய நோயினால் உண்டாகும் இயல்பு மீறிய பெரிய இதயம் உள்ள ஒருவர்.

macrocephaly : பெருந்தலை : நீண்ட அல்லது பெரிய தலை.

macrocheilia : பெரு உதடு; தடி உதடு : உதடுகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்திருத்தல்.

macrocyte : பெருஞ்சிவப்பணு; பேரணு : மரணம் விளைவிக்கும் குருதிச் சோகை வகையில் காணப்படும் பெரிய சிவப்பணுக்கள்.

macrocytosis : அதீத அளவு சிவப்பணுக்கள் : சிவப்பணுக்கள் இயல்பளவுக்கு மீறிப் பெரிதாக இருக்கும் நிலை.

macrodactyly : பருத்த விரல்; மிகு வளர்ச்சி விரல்; மாவிரல்; மாவிரலியம் : விரல்கள் அல்லது கால்விரல்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைந்திருத்தல்.

Macrodex : மேக்ரோடெக்ஸ் : அதிக மூலக்கூற்று எடையுள்ள டெக்ஸ்டிரான் மருந்தின் வணிகப் பெயர்.

macrogametocyte : இனப்பெருக்க உயிரணு : ஒரு சில ஒற்றை உயிரணு உயிரியான முரண்