பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

macroglobulin

656

macule


மூளைக் கிருமியிலிருந்து உருவாகும் ஒரு பெரிய, அசையாத, இனப்பெருக்க உயிரணு.

macroglobulin : அதீத குருதி வடிநீர்ப் புரதம் : ஒரு பெரிய குருதி வடி நீர்ப்புரதம். பன்முக எலும்பு மச்சைப் புற்று, எலும்புப்புரதக் கோளாறுகள், ஈரல் தடிப்பு, அமிலாய்ட் திரட்சி நோய் ஆகிய நோய்களின் போது இதன் அளவு அதிகமாக இருக்கும்.

macroglobulinaemia : அதீத குருதித் தசைப் புரதம் : குருதியில் பேரளவுத் தசைப்புரதம் இருத்தல் இது குருதியின் குழைமத்திறனை அதிகரிக்கிறது.

macroglossia : பெருநாக்கு; பெருநா; பெரு நாவியம் : அளவுக்கு மீறிப் பெரிதாகவுள்ள நாக்கு.

macromania : உறுப்புப் பெருக்கம் : மிகப்பெரிய உடலுறுப்புகளைக் கொண்டிருக்கும் திரிபு நிலை.

macromastia : பெரு மார்பகம்; பெரு முலை : மார்பகம் அளவுக்கு மீறி பெரிதாக இருத்தல்.

macromolecule : மூலக்கூறு பெருக்கம் : புரதம், சர்க்கரைச் சேர்மம், மீச்சேர்மம் போன்ற பெரிய மூலக்கூறு.

macronucleoli : மையக்கரு விரிவடைதல் : சிறுநீரகப்புற்று, மார் பகப்புற்று, கேடயச்சுரப்புப் புற்று, உக்கிரமான கரும் புற்று, ஹாட்கின் நோய் போன்ற சில உக்கிரமான நோய்களின் போது மையக்கருக்கள் விரிவடைந்திருத்தல், திசுக் கோளாறின் போது இது காணப்படுகிறது.

macronucleus : கருமைய ஆக்கிரமிப்பு : உயிரணுவின் பெரும் பகுதியை கருமையம் ஆக்கிரமித் திருத்தல்.

macrophages : ஒற்றைக்கரு உயிரணுக்கள்; பெருவிழுங்கணு : அயல்பொருள்களையும், உயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்பரவு செய்யும் உயிரணுக்கள்.

macrophthalmia : கண்விழிப் பெருக்கம் : கண்விழி இயல்பு மீறிப் பெரிதாக இருத்தல்.

macroscopic : கண்ணுக்குப் புலனாகிற : வெற்றுக் கண்களுக்கப் புலனாகிற.

macrotome : உறுப்பு வெட்டுக் கருவி : பெரிய உடல் உட் கூறுப்பகுதிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி.

macula : புள்ளி; பொட்டு; மறு; விழித்திரைப்புள்ளி; கருவிழித் தழும்பு :தோலில் நிலையாக உள்ள மறு. கண் விழிப்பின் புறத்திரையில் உள்ள மஞ்சள் புள்ளி.

macule : திட்டு.