பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

maladjustment

malleable


மாப் பொருள்கள், கொழுப்புச் சத்து இவற்றின் விகிதம் அதிகரித்தாலும் இது உண்டாகலாம்.

maladjustment : உறுப்பமைதிக் கேடு : உடல் உறுப்புகள் பொருத்தமின்றி அமைந்திருத்தல்.

malaise : உடல்நலக் குறைபாடு; உடலியக்கச் சோர்வு; சுகக்கேடு; வாட்டம் : எவ்வித நோயும் இல்லாமலேயே உடல் நலம் குன்றிய நிலை.

małalignment : தெற்றுப்பல் : பற்க்கள் ஒரு சீராக இராமல் ஒழுங் கின்றி அமைந்திருத்தல்.

malar : கன்ன எலும்பு : கன்னத்துக்குரிய எலும்பு.

malaricidal : மலேரியா ஒட்டுண்ணிக் கொல்லி : மலேரியா ஒட் டுண்ணியைக் கொல்லும் குண முடைய.

malaria : முறைக்காய்ச்சல் (மலேரியா) : வெப்ப மண்டலப் பகுதிகளில் உண்டாகும் உடல் நலத்திற்கக் கேடு விளைவிக்கும். மலைக் குளிர் காய்ச்சல். இது 'அனோஃபிலிஸ்' என்னும் கொசுவினால் உண்டாகிறது.

malariologist : முறைக்காய்ச்சல் வல்லுநர்; மலேரியா நோய் வல் லுநர்; மலேரியவியலார் : முறைக் காய்ச்சல் மருத்துவத்தில் வல்லுநர்.

malassimilation : செமித்தல் கோளாறு; செரிமானக் கேடு : உணவு செமிப்பதில் ஏற்படும் கோளாறு.

Malatex : மாலாட்டெக்ஸ் : ஃபுரோப்பிலீன் கிளைக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

maldevelopment : குறை வளர்ச்சி.

malformation : குறை அமைவு; உடல் திரிபு; இயல்பிலா வளர்ச்சி; வடிவக் கேடு; உக்கிர வேகம் : உடல் கட்டமைப்பு இயல்பு மீறித் திரிபடைந்திருத்தல்; பொருத்தமில்லா உருவ அமைப்பு: உடல் செப்பக் கேடு.

malignancy : உக்கிர வேகம் : நோய் வகையில் துன்பம் விளை விக்கும் தீவிரத் தன்மை.

malignant : உக்கிரமான; கொடிய; வீரிய : நோய் வகையில் உக்கிர மான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற கேடு விளைவிக்கிற.

malingeres : நோய்ப்பசப்பு.

malingering : நோய்ப் பாசாங்கு : நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையைத் தட்டிக் கழிக்க முயல்தல்.

malleable : வளைந்து கொடுத்தல்; வளையக் கூடிய : அழுத்தத் தினால் வடிவத்தை உருவாக்கும் இயல்புடைய.