பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

malposition

661

mammoplasty


அணுக்கள், முன் உயிரணுக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒர் உயிரிலுள்ள உயிரணுக்கூறு.

malposition : நிலை மாறுபாடு; உறுப்பு நிலை மாற்றம் : ஒர் உறுப்பு இயல்புக்கு மீறி நிலை பிறழ்ந்திருத்தல்.

malpractice : ஒழுங்கற்ற மருத்துவம்; தவறான மருத்துவம்; முறை யிலா மருத்துவம் : ஒழுக்கக்கேடான அல்லது தீங்கு செய்யக் கூடிய முறையில் மருத்துவத் தொழில் நடத்துதல்.

malpresentation : முதிர்கரு முனைப்பு; குலை பிறப்பு : இடுப்புக் கூட்டினுள் முதிர்கரு வழக்கத்திற்கு மாறாக முனைந்திருத்தல்.

malrotation : குலை சுழற்சி.

maltose : மாவெல்லம் : மாவூறலிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை.

malt worker's lung : மாவூறல் தொழிலாளர் நுரையீரல் : பூஞ்சை பிடிப்புள்ள உலர்புல், பர்லி ஆகியவற்றிலுள் ஆஸ்பெர்கில்லஸ் கிளாவட்டஸ், ஏ. ஃபியூமிகேட்டஸ் ஆகியவற்றின் நுண்துகள்களுக்கு மிகையுணர்வு காரணமாக ஏற்படும் புற இயக்க ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை வீக்கம்.

malunion : பிணைப்புத் தவறு; எலும்பு இணையாமை : முறிவைத் தவறான நிலையில் பிணைத்தல்.

mamillary body : முலைக்காம்பு உள் துகள் : கீழ்த்தளத்திலுள்ள இரண்டு சிறிய பழுப்பு நிறப் பொருள் திரள்களில் ஒன்று.

mamillated : முலைக்காம்பு புடைப்பு : முலைக்காம்பு போன்ற முனைப்புப் புடைப்பு.

mamilliplasty : முலைக்காம்பு அறுவை மருத்துவம் : முலைக் காம்பின் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.

mammilla : முலைக்காம்பு : முலைக் காம்பு வடிவ உறுப்பு.

mammal : பாலூட்டி : குட்டிப் போட்டுப் பாலூட்டும் உயிர்.

mammary : முகைசார்.

mammoctomy : முகை நீக்கம்.

mammogram : மார்பக ஊடுகதிர்ப் படம் : மார்பகத்தின் மென் திசுக்களின் ஊடுகதிர்ப் படம்.

mammography : மார்பக ஊடுகதிர்ப்படம் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல்.

mammoplasty : மார்பகப் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் : மார்பக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை விரிவாகிற அல்லது தொய்வுடைய மார்பகத்தைக் குறைப்பதற்கு அல்லது மேல் நோக்கி உயர்த்துவதற்கு இது செய்யப்டுகிறது. மார்பகத்திலுள்ள ஒரு கட்டியை அகற்றிய பிறகு பிளாஸ்டிக் சீரமைப்பு மூலம்