பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mankind

663

marble bone disease


mankind : மனித இனம்; மனித குலம்.

mannerism : செய்ற்பாங்கு :அசைவு, நடவடிக்கை, பேச்சு ஆகியவற்றில் ஒரு புதுமையான பாணி.

mannite : இன்னுணவுப் பொருள் : இயற்கையான குடலிளக்க இன் சாற்றுப் பொருள்.

mannitoi : மானிட்டால் : பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

manometer : அழுத்தமானி : திரவம் அல்லது வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

manometry : அழுத்த அளவீடு : அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல்.

Mantoux reaction : மாண்டூக்ஸ் இணக்கம் : எலும்புருக்கி நோய்க்கு தோல் வழி ஊசி மருந்தாகச் செலுத்தப்படும் மருந்து.

manubrium : மார்பெலும்பு; நெஞ்சு மேலெலும்பு : மார்பக எலும்பின் அல்லது மார்பெலும்பின் மேற் பகுதியின் கைப்பிடி வடிவிலான கட்டமைப்பு.

manubrium sterni : நெஞ்சுமேல் எலும்பு.

manus : கை.

manus, valgus : வெளிவளைகை; வெளிக் கோணல் கை.

manus, varus : உள்வளைகை; உட் கோணக்கை.

MAOl : மாவோய் : மானோ அமின் ஆக்சிடேஸ் இன்கி பிட்டர் மருந்து

Maple bark stripper's lung : மாப்பிள் பட்டை உரிப்பவர் நுரையீரல் நோய் : மிகையுணர்வு காரணமாக ஏற்படும் புற இயக்க ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை வீக்கம்.

marantic endocarditis : காற்று இதய உள்ளறை அழற்சி : பாக்டீ ரியாவினால் உண்டாகாத இதய உள்ளுறை அழற்சி. இது குருதி உறைவு, உறைகட்டி அடங்கிய ஒரதர் இதழ்களின் இரு பக்கத்திலும் கிருமிகளற்ற தசை வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

marasmus : உடல் கரைவு; குழந்தை உடல் மெலிவு; நோஞ்சான்; பெரு இளைப்பு; மெலி சவலை : ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, உடல், முக்கிய குழந்தையின் உடல் மெலிதல்.

marble bone disease : பளிங்கு எலும்பு நோய் : எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன