பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

masculine

665

mastocytosis


இன்புறும் முரணியல் சிற்றின்ப நிலை.

masculine : ஆண்பால் : 1. ஆண் பாலினம் தொடர்புடைய. 2. ஆணின் பண்புகளையுடைய.

masculinity : ஆண்மை.

masculinization : ஆண்மையாக்கம்; ஆணாக்கல் : 1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்லது உயிர்ச்சத்து இயற்கை இயக்கு நீர்களை (ஸ்டெராய்ட்ஸ்) உட்கொள்வதால் இது உண்டாகலாம். இதனை வீரியமாக்கம் (vilisation) என்றும் கூறுவர்.

mass : பொருண்மை :' 1. ஒட்டிணைவான துகள்களின் அல்லது அமைப்பான்களின் ஒரு திரட்சி, 2. மாத்திரைகளாகத் தயாரிக்கக் கூடிய ஒட்டிணைவான ஒரு கலவை, 3. ஒரு பொருளுக்குச் சடத்துவப் பண் பினைக் கொடுக்கும் இயல்பு.

masochism : வலி நசை .

mass : கனம்; பருமன்.

massage : தேய்த்துப் பிசைதல்; பிடித்துவிடல்; நீவுதல் : தசைகளும் முட்டுகளும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்துவிடுதல். மாரடைப்பின் போது இதயத்தைச் செயற்படச் செய்வதற்காக மார்புப் பகுதியில் இவ்வாறு செய்வர்.

mastalgia : மார்பகவலி; முலை வலி : மார்பகத்தில் உண்டாகும் நோவு.

mastectomy : மார்பகற்று அறுவை; முலை நீக்கம் : மார்பகத்தை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.

Masteril : மாஸ்டெரில் : டிரோஸ் டானோலீன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

mastication : பல்லரைப்பு; மெல்லுதல்; அசை போடுதல் : பல்லை மெல்லுதல்.

mastitis : மார்பக அழற்சி; முலை யழற்சி : மார்பகத்தில் ஏற்படும் வீக்கம். மார்பகங்களில் ஏற்படும் கரணை மாற்றங்களினால் உண்டாகிறது.

mastocytosis : பாய்மர உயிர் நுண்ம அழற்சி : திசுக்களிலுள்ள வயிற்று அமிலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் பாய்மர உயிர ணுக்களின் ஒரு திரட்சி. இந்த நிலை, எலும்பு மச்சை, நிண நீர்க் கரணைகள், அடிவயிற்று உறுப்புகள் உள்ளடங்கிய டிப்புச் சொறி அல்லது மண்டலச் சுற்றோட்ட வடிவில் தோலில் மட்டுமே உண்டாகலாம்.