பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

measles

668

mediastinitis


மிடையிலான விகிதம் பொதுவாக இந்த விகிதம் 3-41 என்ற அளவில் இருக்கும்.

measles : தட்டம்மை (புட்டாளம்மை); மணல்வாரி : வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும்.

meatotomy : சிறுநீர்க் குழாய் அறுவைத் துவார வெட்டு : சிறு நீர் நாடிக் குழாய்ப் புண்களை அகற்றுவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

meatoscopy : நாடிக்குழாய் ஆய்வுக் கருவி : சிறுநீர் வடிகுழாய் போன்று நாடிக்குழாயை ஆராய்வதற்கான கருவி.

meatus : நாடிக் குழாய்; துவாரம்; துளை : ஒரு செல் குழாய்.

meatus, external accoustic : செவித்துளை.

meatus, auditory : கேள்துளை.

meatus, internal accoustic : உட்செவித்துளை.

meatus, urimary : தாரைத்துளை.

mechanical : கைப்பாடான.

mechanism : இயக்கமுறை.

mechanism, homeostatic : அகவமைவு.

mechanism, protective : காப்பியக்கம்.

mechanotherapy : எந்திரந் மருத்துவ முறை : மந்தமான அசைவுகளைச் செய்வதற்குப் பல்வேறு எந்திர சாதனங்களை பயன்படுத்துதல்.

meconium : முதல் மலம்; காட்டுப் பீ; பிண்ட மலம்; மெக்கோனியம் : பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து வெளிப்படும் பசுங்கருமைநிறப் பொருள்.

medazolam : மெடாசோலம் :உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படும் ஒரு பென் சோடியாஸ்பின் வகை மருந்து.

media : குருதிக் குழாய் மென்தோல்; குருதிக் குழாய் இடைப்பாளம்; ஊடுபொருள்; இடைப் படலம்; இடைச்சுவர் : குருதிக் குழாயின் இடை மென்தோல்.

median : நடுநாடி; இடை; மைய : நடுக்குருதிக் குழாய்; நடுநரம்பு; கண்களுக்கிடையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து பாதங்களுங்கிடையிலான ஒரு புள்ளி வரையில் உடலில் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனைக் கோடு.

mediastinum : நுரையீரல் இடையிதழ்; மார்புத் தடுப்புச் சுவர்; இடைப் படலம்; நெஞ்சிடை : உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ்.

mediastinitis : நுரையீரல் இடையிதழ் அழற்சி : நுரையீரல் இடையிதழ்த் திசுக்களில் ஏற்படும் வீக்கம்.