பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

melanism

673

melituria


வற்றில் காணப்படும் மைக் கருமை.

melanism : மிகை மைக்கருமை : தோல், மயிர் ஆகியவற்றில் மட்டு மீறிய கருநிறமிகளால் ஏற்படும் மைக் கருமை.

melanosis : கரும்புற்றுநோய் : சதைப் பற்றுகளில் கருநிறமிகளின் அளவு மீறிய படிவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.

melanocytic naevus : உள்தோல் மச்சக்கட்டி : உள்தோலிலுள்ள நிறமேறிய மச்சக் கட்டி இதில் செயலற்ற கரும்புற்று உயிரணு அடங்கியிருக்கும்.

melanoderma : மிகைமைக் கருமை : தோலில் அளவுக்கு அதிகமாகக் மையக்கருமை (கரியம்) இருத்தல்.

melanodermatitis : தோல்மிகை மைக் கருமைப் படிவு : தோல் அழற்சியின் ஒரு பகுதியில் மைக்கருமை (கரியம்) அதிக அளவில் படிந்திருத்தல்.

melanogen : மெலனோஜன் : மைக்கருமையுடன் தொடர்புடைய கூட்டுப் பொருள். இது முற்றிய உக்கிரமான கரும்புற்று பீடித்த நோயாளிகளின் சிறுநீரில் வெளியேறுதல்.

melanonychia : நகக்கருமை : மைக்கருமை நிறமியாக்கம் காரணமாக நகங்கள் கருமையாதல்.

melanplakia : கன்ன நிறமிப்பட்டை : கன்னச் சளிச்சவ்விலும் நாக்கிலும் நிறமேறிய பட்டைகள் உண்டாதல்.

melanosarcoma : இழைமப்புற்று மைக்கருமை : இழைமப் புற்று அடங்கிய மைக்கருமை (கரியம்).

melanosis : கரும்பற்று நோய் : சதைப் பற்றுகளில் கருநிறமிகளின் அளவுக்கு அதிகமாகப் படிவதால் ஏற்படும் மிகு கருமைக் கோளாறு.

melanuria : சிறுநீர்க்கருமை : மைக்கருமையின் (கரியம்) முன் னோடிப் பொருள் காரணமாகச் சிறுநீர் கருமை நிறமடைதல். மிகைமைக்கருமையிலிருந்து உண்டாகும் விரிவான நோய் இடமாறல் நோயில் இது காணப்படுகிறது.

Meleney's ulcer : மெலனி அழற்சிப் புண் : நுண் சங்கிலிக் கிருமி, குழந்தைக் குருதி நுண் சங்கிலிக்கிருமி, வட்டப் பாக்டீரியா ஆகியவற்றின் கூட்டு வாழ்க்கை வினை. இவை கடுமையாகப் பரவுகிற வலியுண்டாக்கும் நைவுப் புண்ணையும், துளையுடைய நெஞ்சுறுப்புகளின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய காயத்தின் தசையழுகல் நோயை உண்டாக்கும் இயல்பூக்கி.

mellituria : சிறுநீர் வழி சர்க்கரைக் கழிவு : சிறுநீரில் உள்ள குருதிப்