பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

melarsoprol

674

memory


பழச்சர்க்கரை (குளுக்கோஸ்), பழச்சர்க்கரை (Fructose), மா வெல்லம் (Maltose). பென்டோஸ் போன்ற சர்க்கரைகளில் ஒன்று வெளியேறுதல்.

melarsoprol : மெலார்சோப்ரோல் : உறக்க நோயின்போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள்.

melarsonyl potassium : மெலார்சோனில் பொட்டாசியம் : உறக்க நோயின் போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள். இது மெலார்சோப்ரோலைவிட நச்சுத்தன்மை குறைந்தது.

melatonin : மெலாட்டோனின் : மூளையின் மூன்றாவது குழியின் பின்னுள்ள செயல் விளக்கம் உணரப்படாத பினியல் சுரப்பியில் உற்பத்தியாகும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்). இது பல்வேறு சுரப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதாகத் தெரிகிறது. சூரிய ஒளிச் சிகிச்சையினால் இந்த இயக்குநீர் சுரப்பது கட்டுப்படுத்தப்படுவதாக அண்மை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

Melitase : மெலிட்டேஸ் : குளோரோப்புரோப்பாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Melieril : மெல்லரில் : தியோரிடாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Melkerson's syndrome : மெல்கெர்சோன் நோய் : முகத்தில் அடிக்கடி உண்டாகும் முடக்குவாதம். இதில் உதடுகள் வீங்குதல், பிறவிலேயே நாக்கு மடிப்பு ஆகியவை ஏற்படுகிறது. ஸ்காண்டினேவிய மருத்துவ அறிஞர் இ. மெல்கெர்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.

melon seed bodies : முலாம்பழ விதைப் பொருள் : பல்வேறு வீக்கங்களின் போது இணைப்புக் குழிகளில் காணப்படும் மென்மையான சிறிய சுதந்திரமான நுண்பொருள்கள்.

meloplasty : கன்ன அறுவை மருத்துவம் : கன்னத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல்.

membrane : சவ்வு. மூடி இருக்கும் மெல்லிய தோல்.

membrane, basement : அடி மென் சவ்வு.

membrane, limiting : ஓரச்சவ்வு.

membranolysis : உயிரணுச் சவ்வுச் சீரழிவு : உயிரணுச் சவ்வு சீர்குலைவு.

membrum virile : ஆண்குறி.

menadiol : மெனாடியோல் : நீரில் கரையக்கூடிய, வைட்டமின் k என்ற உயிர்ச்சத்துக்கு இணையான பொருள்.

memory : நினைவாற்றல்; ஞாபகம்; நினைவு : 1. ஒருதரம் அனு பவித்ததை அல்லது கற்றுக்