பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adam's apple

67

addisonian crisis


adam's apple : குரல்வளைக்கூர்; குரல்வளை மணி :கழுத்தின் முன் பகுதியில், குறிப்பாக வயது வந்த ஆண்களிடமுள்ள குரல் வளைப் படைப்பு.

குரல்வளை மணி


இது, சங்குகளைக் குறுத்தெலும்பின் இரு சிறகங்களும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.

adaptability : தகவமைப்புத் திறன்; தழுவு திறன் : நிலைமைக் குத்தக்கபடி உளவியல் முறையிலும், உடலியல் முறையிலும் தன்மை மாற்றியமைத்துக் கொள்வதற்கான திறன்.

adaptation : சார அமைத்தல்; படிக்கமாக்கல்.

adapter : இணைப்புப் பொறி : ஒரு கருவியின் ஒரு பகுதியை மற்றொரு கருவியோடு பொருத்துவதற்குப் பயன்படும் துணைப்பொறி (இணைப்புப் பொறி).

adaption : பழக்கும் திறமை; ஏற்புத் திறன்; தகைவு; தகவமைப்பு : உயிர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கொப்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். இஃது உறுப்பு, நிறம் முதலானவற்றில் அமையும்.

adaptometer : இசைவுமானி : கண் தகவமைப்புக் காலத்தை அளக்க உதவும் கருவி.

adcorty : அட்கார்ட்டில் : 'டிரியாம்சினலோன்' என்ற மருந்தின் வணிகப் பெயர். வாய்ப்புண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் பற்பசை.

addict : பழக்க அடிமை; வயப்பட்டவர்; வயவர் : ஒருவர் தன் உடலால் அல்லது உள்ளத்தால் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைமை. குறிப்பாக மதுமருந்து அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாதல்.

addiction : தீய பழக்கத்திற்கு அடிமையாதல்; பழக்க அடிமைத் தனம்; வயமை; பழக்கப்பற்று : போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருட்களை நாடிச் செல்கிறார்கள்.

addisonian crisis : அடிசோனியன் இக்கட்டான நிலை : திடீரென உடலில் அட்ரீனலின் இயக்குநீர் குறைவதால் உண்டாகும் இக்கட்டான நிலைமை. இது