பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mesencephalon

679

Mestinon


திலிருந்து கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம்.

mesencephalon : நடு மூளை அறுவை மருத்துவம் : நடு மூளையிலுள்ள ஏதேனும் கட்டமைப்பை-குறிப்பாக முதுகுத்தண்டு-மூளை அறைக் குழாய்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். தாங்க முடியாத வலியைப் போக்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

mesenteriplication : குடல் தாங்கிக் குறுக்கம் : குடல் தாங்கியை அதில் மடித்துச் சுருக்கிவிட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் குறுக்கமடையச் செய்தல்.

mesocardium : இரைப்பைக் குடல்தாங்கி : இதயத்துக்கு முட்டுக் கொடுத்து, அதனைக் கரு முளையின் , சீரணக்குழாயின் முன்பகுதியினு டனும் மைய உடல் சுவருடனும் இணைக்கும் கருமுளைக் குடல்தாங்கி.

mescaline: மெஸ்காலின் : சோகநினைவின் எதிர் விளைவினை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.

mesencephalon : நடு மூளை; இடைமுளை : மூளையின் மையப்பகுதி.

mesentery : குடல்தாங்கி; குடல் இணையம்; வபை : குடற் குழாயில் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடன் இணைக்கும் இரு மடி ஊநீர்ச்சவ்வு.

mesogaster : இரைப்பை இணைப்புச்சவ்வு : வயிற்றின் பின்புறப் பகுதியோடு இரைப்பையை இணைக்கும் மென் சவவு.

mesonephroma : கரு அண்டக் கட்டி : குழாய் போன்ற அமைப்புள்ள கரு அண்டத்தில் மிக அரிதாக ஏற்படும் உக்கிரமான உடல் கட்டி, மேல் தோலிழைம உயிரணுக்களின் இந்தக் குவி மைய வளர்ச்சி ஏற்படும்.

mesothelioma : மார்புக்கட்டி; இடைத் தோலியப் புற்று : மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற்றில் மிக விரைவாகப் பரவி மரணம் விளைவிக்கக் கூடிய ஒருவகைக் கட்டி இது கல்நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உண்டாகிறது.

mesothelium : தோலிய உயிர் அணுக்கள் : நிணநீர் உட்குழிவுகளில் ஒரு புறத்தோலுறையாக அமைந்துள்ள, ஒரே அடுக்குள்ள தட்டையான உயிரணுக்கள்.

mesovarium : வயிற்று உறை மடிப்பு : கரு அண்டத்தின் முன்பு விளிம்பைக் கருப்பையின் அகன்ற இணைப்பிழையின் பின்புற அடுக்குடன் இணைக்கிற ஒரு குறுகிய வயிற்று உறை மடிப்பு.

Mestinon : மெஸ்டினோன் : பைரிடோஸ்டிமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.