பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metaanalysis

680

metaloenzyme


metaanalysis : உய்த்துணைப் பகுப்பாய்வு : பன்முக ஆய்வுகளின் நுணுகி ஆராய்ந்து, ஒருங்கிணைந்து, விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்குவருவதற்கு புள்ளியியல் முறைமையினைப் பயன்படுத்துகிற ஒரு பகுப்பாய்வுத்துறை.

metabasis : நோய்க்குறிமாற்றம் : ஒரு நோய் பீடித்திருக்கும் போது மருத்துவ அறிகுறிகளில் ஒரு மாற்றம் ஏற்படுதல்.

metabiosis : சார்பு உயிரி : ஓர் உயிரி இன்னொரு உயிரியைச் சார்ந்திருத்தல்.

metabolic : வளர்சிதை மாற்றம் சார்ந்த; ஆக்கச் சிதைமாற்ற : உயிர்ப்பொருள் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிற.

metabolism : வளர்சிதையம்; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச்சிதை மாற்றம் : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பெர்ருள் மாறுபாடு.

metabolite : வளர்சிதை வினை மாற்றப்பொருள் :வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடிய பொருள் எதுவும். வைட்டமின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.

metacarpal : அங்கை முன் எலும்பு : 1. உள்ளங்கை எலும்பு தொடர்புடைய 2 உள்ளங்கை யின் ஒர் எலும்பு.

metacarpus : உள்ளங்கைஎலும்பு : மணிக் கட்டுக்கும் விரல்களுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி.

metacentric : இனக்கீற்று மையம் : ஒர் இனக்கீற்றின் மையத்தை நோக்கி டி.என்.ஏ யின் பகுதி அமைந்திருத்தல்.

metachromasia : திசுநிற வேறுபாடு : சாயத்தில் பயன்படுத்தப் படும் வண்ணங்களிலிருந்து நிறம் வேறுபடும் ஒரு திசுவின் இயல்பு.

metacone : தாடைக்கதும்பு : மேல்பின் கடைவாய்ப் பல்லின் தாடைப் பிறைக் கதுப்பு.

metaloenzyme : உலோக அயனி; செரிமானப் பொருள் : அமினோ