பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metathalamus

682

methandienone


கணுக்காலுக்கும் கால்விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்களின் எலும்புத் தொகுதி.

metathalamus : மூளை நரம்பு முடிச்சு வால் : மூளை நரம்பு முடிச்சின் வால்பகுதி இதில் நடு மைய மற்றும் கிடைமட்ட கணுக்களின் திரள் அடங்கியிருக்கும்.

metathesis : அணுமாற்றம் : இரண்டு அணுக்களிடையே ஏற்படும் அணுமாற்றம். இதனால் ஒரு நோயியல் பொருளின் விளைவு குறையும்.

metazoa : பல உயிரணு உயிரிகள் : பல உயிரணுக்களுடைய விலங்கு உயிரிகள். இவற்றில் உயிரணுக்கள் வேறுபடுத்தப்பட்டு, திசுக்களாக அமையும்.

metformin : மெட்ஃபோர்மின் : நீரிழிவு நோய்க்குப் பயன்படும் மருந்து.

methacycline : மெத்தாசைக்ளின் : கடுமையான மார்புச்சளி நோய்க்குப் பயன்படும் உயிர் எதிர்ப்பொருள்.

methadone : மெத்தாடோன் : நோவகற்றும் செயற்கை அபினிச் சத்து. இதனை வாய்வழியாகக் கொடுக்கலாம்; ஊசி வழியாகவும் செலுத்தலாம். வறட்டு இருமலுக்கு மிகவும் ஏற்றது.

methaemoglobin : குருதி ஆக்சிஜன் குறைவு : ஒருவகைக் குருதிச் சிவப்பணு. இதில் அயனி, ஈரிணை இரும்பு நிலையிலிருந்து மூவினை இரும்பாக ஆக்சிகரமாகிறது. இது ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல முடி யாது. இது இரத்தத்தில் பொதுவாகச் சிறு சுவடுகளாகக் காணப்படும்.

methaemoglobinaernia : குருதி ஆக்சிஜன் குறைபாடு : இரத்தத்தில் மெத்தேயோ குளோபின் இருத்தல். இதனால் இரத்தம் ஆக்கிஜன் சரிவர ஊட்டப் பெறாமல் சுழல்வதால் தோல் நீலநிறமாகக் காணப்படும்.

methhaemoglobinuria : சிறுநீரி மெத்தேமோகுளோபினூரியா : சிறுநீரில் மெத்தேகுளோபின் இருத்தல்.

methanol : மெத்தனால் : மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்று, பார்வை நரம்பினைச் சேதப்படுத்தி, குருட்டுத்தன்மை உண்டாக்கும். மெத்தனால் வளர் சிதைவினை மாற்றப்பொருள்களையும், நச்சு விளைவுகளை யும்குறைக்கப் பயன்படுத்தப் படுகிறது.

methandienone : மெத்தாண்டியனோன் : உயிர்ப்பொருள் அழிவுண்டாவதைத் தடுக்கும் பொருள்.