பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metoprolol

685

Meyer-Betz...


metoprolol : மெட்டோப்ரோலோல் : மட்டுமீறிய மிக உயர்ந்த குருதி அழுத்தத்தைக் குணப்படுத்தப் பயன்படும் மருந்து.

metritis : கருப்பைவீக்கம்; கருப்பை அழற்சி; கருவக அழற்சி.

metrizamide : மெட்ரிசாமைடு : ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதிலும், CT உருக்காட்சிகளை உருப்பெருக்கம் செய்வதிலும் பயன்படுகிறது.

metronidazole : மெட்ரோனிடாசோல் : நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும், நரம்பு வழியாக வும் கொடுக்கலாம்.

metroparalysis : கருப்பை முடக்கு வாதம் : மகப்பேற்றின் போதோ அல்லது மகப்பேறு நடந்த உடனேயோ கருப்பையில் முடக்கு வாதம் ஏற்படுதல்.

metroperitonitis : வபை அழ்ற்சி : வயிற்று உறுப்பு உறை (வபை) சார்ந்த கருப்பை வீக்கமடைதல்.

metyrapone : மெட்டிராப்போன் : B-ஹைடிராக்சிலேஸ் எனப்படும் தணிப்பி. இது குண்டிக்காய் இயக்குநீர் இணைப் பாகத்தில் இறுதிச் செரிமானப் பொருள். இது மூளைக் கீழ்த்தளம், கபச்சுரப்பி, அண்ணீரகச் சுரப்பி ஆகிய மூன்றுக் கிடையிலான ஊடச்சு பற்றி மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

metrorrhagia : கருப்பை இரத்தப் போக்கு; இடை மாதவிடாய் : மாதவிடாய் நாட்களுக்கிடையே கருப்பையிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படுதல்.

metyrapone : மெட்டிராப்போன் : சிறுநீர்ப்போக்கினை மறைவாகத் தூண்டும் ஒர் மருந்து.

mexiletine : மெக்சிலெட்டின் : நெஞ்சுப்பை பிறழ் இதயத் துடிப்பு எதிர்ப்புப் பொருள். இது இதயக்கீழறை விரைவுத் துடிப்பு, இதயத்தசைத் துடிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது.

Mexitil : மெக்சிட்டில் : மெக்சி லெட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Meyer-Betz syndrome : மேயெர்-பெட்ஸ் நோய் : வலிப்பு இசிவு முதல் நிலை இதயத்தசைச் சிறு நீர்ப்புரதக் கலப்பு, இதில் தசை அழுகலும் இணைந்திருக்கும். இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் எஃப் மேயர் பெட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.