பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

migraleve

691

Milkman's lines


migraieve : மைக்ரலீவ் : ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் புக்லைசின், பாராசிட்டமால், காஃபின் கோடைன் கலந்த ஒரு கலவை மருந்து.

migranous neuralgia : ஒற்றைத்தலை நரம்பு வலி : நடுத்தர வயது ஆண்களுக்கு அடிக்கடி உண்டாகும் ஒற்றைத்தலைவலி, இமைசினைப்படலம் சார்ந்த குத்துவலி, கண்ணிர் வடிதல்; மூக்கடைப்பு.

Migravess : மைக்ராவெஸ் : ஒற்றைத் தலைவலியைக் குணப் படுத்துவதற்கான மெட்டக் குளாப்பிராமின் ஆஸ்பிரின் அடங்கிய மாத்திரையின் வணிகப் பெயர்.

Migrol : மைக்ரோல் : ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் எர்கோம்மமின், சைக்கிளிசின், காஃபின் அடங்கய மருந்தின் வணிகப் பெயர்.

Mikulicz disease : மிக்குலிக்ஸ் நோய் : கண்ணிர் மற்றும் எச்சில் சுரப்பிகள் அளவுக்கு மீறி விரிவடைதல்.

miliaria : இருப்புக் கொப்புளம்; வியர்க்குறு : வியர்வை நாளங் களில் அடைப்பு ஏற்படுவதால் இடுப்புப் பகுதியில் ஏற்படும் மணல்வாரிப் பருக்கள் போன்ற கொப்புளங்கள் உண்டாதல்,

miliary : கூலவிதை போன்ற; நுண்மணிய வியர்க்குறு : கூலவிதை, போன்ற கொப்புளங்கள்.

milium : கண்கழலை : முகத்தில், முக்கியமாக கண்ணிமைகளைச் சுற்றி ஏற்படும் நுண்ணிய வெண்மையான கழலை.

milk : பால் : தாய்ப்பாலில் இன்றியமையாத சத்துப் பொருட்கள் அனைத்தும் சரிவிகிதங்களில் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால், நோய் தொற்றுதல் தடுக்கப்படுகிறது.

milk alkali syndrome : பால் வன்கார நோய் : பொருமளவு பாலுடன் சேர்ந்த பல ஆண்டுகளாக உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய அமில முறி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு ஏற்படும் நோய். இதனால், அதிக கால்சியக் குருதி, உறுப்பிடை மாற்றச் சுண்ணப்படிவு, சிறுநீரகம்

milk-crust : குழந்தை கரப்பான்.

milk-leg : மகப்பேறு கால்வீக்கம்.

Milkman's lines : மில்க்மன் கோடுகள் : எலும்புகளின் ஊடு கதிர்ப்படத்தில் காணப்படும் போலி எலும்பு முறிவுகள். இவை சுண்ணமகற்றுதலின் வரி மண்டலங்கள். இவை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றும் மேலும் மேலுறைக்குச் செங்குத்தாக இருக்கும். அமெரிக்க ஊடுகதிரியலறிஞர் லூயி மில்க்மன் பெயரால் அழைக்கப் படுகிறது.