பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mite...

694

Mitsuda reaction


mite,itch : சொறி நுண்பேன்.

Mithracin : மித்ராசின் : மித்ராமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mithramycin : மித்ராமைசின் : ஸ்டிரெப்டோமைசுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரணு நஞ்சேற்ற உயிர் எதிர்ப்பு மருந்து. கருக்கட்டியிலும், உக்கிரத்தில் உண்டாகும் அதி கால்சியக் குருதியிலும் பயன்படுத்தப் படுகிறது.

mithridatism : நச்சுக் காப்பீடு : நஞ்சின் செயலுக்கு எதிராக ஈட்டப்படும் ஏமக் காப்பு. இது படிப்படியாக, சிறிய அளவில் மருந்து கொடுப்பதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்திய போரிட்டஸ் மன்னன் மித்திரி டேட்டஸ் பெயரால் அழைக்கப்படுகிற்து.

mithridatization : நச்சுக் காப்பீடு : சிறிது சிறிதாக நஞ்சுண்டு நஞ்சு காப்பீடு செய்து கொள்ளுதல்.

mitochondrial myopathy : மிட்டோக்கோண்டிரியத்தசை நலிவு : இது ஒரு தசைக் கோளாறு. இது தசையில் இயல்பு மீறிய கட்டமைப்பு, வடிவளவு, வடிவம், மிட்டோக்கோண்டிரியா எண்ணிக்கை உண்டாகிறது.

mitochondrion : மிட்டோக் கோண்டிரியோன் : உயிரணு உயிர்ம உன்மத்தில் உள்ள மிக நுட்பமான கட்டமைப்பு. இதில் பல்வேறு உயிர்வேதியியல் செய்முறைகளுக்கு இன்றியமையாத செரிமானப் பொருள் கள் (என்சைம்) அடங்கியுள்ளன.

mitogen : மிட்டோஜென் : T-உயிரணுக்களில் குறிப்பாக உயிர்மப்பிளவியக்கும் உண்டாவதை தூண்டுகிற ஒரு பொருள்.

mitomycin : மிட்டோமைசின் : மார்பகப்புற்றுக்குப் பயன்படுத் தப்படும் ஒரு மருந்து.

mitosis : உயிர்மப் பிளவியக்கம் : உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரிதல். இவ்வாறு பிரியும் இழைகள் தாய் உயிரணு வின் பண்புகளை அப்படியே கொண்டிருக்கும்.

mitral : நெஞ்சுச் சவ்வடைப்பு : நெஞ்சுப்பையின் சவ்வடைப்புகளில் ஒன்று.

mitralization : இதய விளிம்பு நீட்சி : இடது இதய வாயில் வீக்கம், நுரையீரல் புண் காரணமாக இதயத்தின் இடது விளிம்பு நீட்சியடைதல், நெஞ்சுச் சவ்வுச் சுருக்கம் பற்றிய மார்பு ஊடு கதிர்ப்படத்தில் இது காணப்படும்.

Mitsuda reaction : மிட்சுடா எதிர் விளைவு : தொழுநோயில் கால தாமதமாக உணர்வு ஏற்படு வதைக் கண்டறியும் தோல் சோதனை. 3-4 வாரங்களுக்கு ஒருமுறை அடித்தோலில் லெப்ரோமின் (தர்மெந்திரா காப்பு மூலம்) மருந்தினை ஊசி மூலம்