பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

moist

696

monitron


moist : ஈர.

molality : கரைவு அனுத்திரள் சிற்றளவு : ஒரு கரைசலின் சிற்றளவு. இது கரைமத்தின் ஒரு கிலோ கிராமுக்கு இத்தனை கரைவுப் பொருளின் அணு திரள்கள் என்ற கணக்கில் குறிப்பிடப்படுகிறது.

molar : அரைப்பான் : 1. அரைத்தல். 2. பெரும் திரள் சார்ந்த, 3. அரைக்கும் பல் 4. நோய் தீர்வு அணுத்திரள் தொடர்பான. 5. குறிப்பிட்ட அளவினைக் குறிப்பிடுதல்.

molar teeth : பின்கடை வாய்ப்பற்கள்; அரவைப் பற்கள்; கடைப்பல் : பின் கடைவாய்ப் பல்வகையில் அரைக்க உதவுகிற பற்கள்.

mole : மறு (மச்சம்) : தோலில் காணப்படும் மச்சம். சில மச்சங்கள் தட்டையாக இருக்கும்; வேறு சில புடைப்பாக இருக்கும். சில சமயம் இதில் மயிர் வளர்ந்திருக்கும்.

molecule : மூலக்கூறு : வேதியியல் பொருளின் பண்பு மாறுபடாத மிகச்சிறிய நுண் கூறு.

Molipaxin : மோலிப்பாக்சின் : டிராடோசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

molities : மென்மைத் தன்மை; மென்மையுறல்.

விளைவுகளைக் உதவும் பொறி.

monday fever : திங்கள் காய்ச்சல் : பஞ்சாலைத் தொழிலாளர்களிடம் வார இறுதிக்குப் பிறகு உண்டாகும் மார்பு இறுக்கம் மற்றும் மூச்சிழைப்பு. இவர்க ளுக்குப் பின்னர் நுரையீரல் நோய் உண்டாகிறது.

Monge's disease : மோங்கே நோய் : மலைகளில் மிக உயரமான இடங்களில் நீண்டகாலமாக வாழுபவர்களுக்கு ஏற்படும் கடுமையான மலைநோய். இதனால் சிவப்பணுப் பெருக்கம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. பெருவியல் நோயியலறிஞர் கார்லோஸ் மோங்கே பெயரால் அழைக்கப்படுகிறது.

mongo : பிறவி அறிவிலி : ஊக்கங்குன்றிய நிலையில் அறிவிலியாக இருக்கும் ஆள், மரபுக்கோளாறால்.

monitor : கதிரியக்க உணர்கருவி : அணுவாற்றல் எந்திரத் தொழி லாளர்களிடையே கதிரியக் விளைவுகளைக் கண்டுணர உதவும் பொறி.

monitoring : அளவீட்டுப் பதிவு; காணிப்பு : உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்ற அளவீடுகளைத் தானாகவே காட்சித் திரையில் காட்டி பதிவு செய்தல்.

monitron : அளவீட்டுப் பதிவு கருவி : உடல் வெப்பநிலை,