பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mononeuropathy

698

mons,pubis


mononeuropathy : ஒற்றை நரம்புக் கோளாறு : 1. ஒற்றை நரம்பைப் பாதிக்கும் நோய். 2. அடுத்தடுத்து அல்லாத நடு நரம்புத் தாம்புகளின் பல்வகைத் தன்மையுள்ள வாசை முறையிலான திருகுசுருள்.

mononuclear : ஒற்றைக் கரு உயிரணு; ஒற்றைக் கரு : ஒற்றை உட்கருவுள்ள உயிரணு பொதுவாக இரத்த உயிரணு வகையைக் குறிக்கிறது.

monoculeosis : ஒற்றைக் கரு உயிரணுப் பெருக்கம் : இரத்தத்தில் ஒன்றை உட்கருவுள்ள உயிரணுக்கள் அளவுக்கு மீறிப் பெருகுதல்.

monoplegia · ஒற்றை உறுப்பு: முடக்கு வாதம்; ஓரங்கவாதம் : உறுப்பில் மட்டும் முடக்கு வாதம் ஏற்படுதல்.

monomucIeotide : மானோ நியூக்ளியோட்டைடு : நியூக்ளிக் அமிலத்தை நீரால் உண்டாகும் ஒரு பொருள். இது குளுக்கோசைடு அல்லது பென்டோ சைடுடன் சேர்த்து ஃபாஸ் போரிக் அமிலத்தைக் கொண்டு இருக்கும்.

monosodium gluramate : மானோசோடியம் குளுட்டாமேட் : உணவுக்கு நறுமணமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் ஒரு வேதியியல் பொருள்.

monospecific : குறித்த வகை விளைவு : ஒரு குறிப்பிட்ட வகை உயிரணு மீது அல்லது. திசுக்களின் மீது மட்டுமே ஓர் விளைவைக் கொண்டிருக்கிற அல்லது தனியொரு காப்பு மூலத்துடன் வினைபுரிகிற.

monosomy : இனக்கீற்று இணையின்மை : இனக்கிற்று இல்லா திருப்பதால் ஏற்படும் நிலை ஒற்றைக்கீற்று.

monosulfiram : மானோசல்ஃபிராம் : சொறி சிரங்குக்குப் பயன்படும் கழிவு நீர்மம். இதன் 20% ஆல்க்கால் கரைசல் பயன் படுத்தப்படுவதற்கு முன்பு மூன்று பகுதி நீரில் நீர்க்கப்படுகிறது.

monotherapy : தனிநோய் மருத்துவம் : தனியொரு இயல்பூக்கியினால் உண்டாகும் கோளாறுக்குச் சிகிச்சையளித்தல்.

monothermia : உடல் வெப்ப நிலை ஒரு சீர்மை : நாள் முழுவது உடல் வெப்பநிலையை ஒரே சீராகப் பேணி வருதல்.

monovalent : ஒற்றை இணைதிறம் : 1. தனியொரு ஹைடிரஜன் அனுவின் கூட்டு ஆற்றலைக் கொண்டிருத்தல், 2. ஒரு குறிப்பிட்ட காப்பு மூலத்தின் அல்லது தற்காப்பு மூலத்தின் கூட்டுத் திறம்பாடு.

mons, pubis : மதனமேடு.