பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mountain sickness

701

mucus


புண்களை உடைய தோலின் ஒரு பரப்பு. 2 மார்பு ஊடுகதிர்ப் படத்தில் நுட்பமான, தனித் தனியான ஊடுகதிர் நிழல்கள்.

mountain sickness : மலைநோய் : உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய்.

mouse : சுண்டெலி : 1. "ஜீனஸ்மஸ்" என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கொறிக்கும் பிராணி, 2. உடல் உட் குழிவிலிருந்து அல்லது இணைப்பிலிருந்து தனியாகப் பிரிகிற திசுக்கள் ஒரு சிறிய துணுக்கு.

mouth : வாய் : 1. கன்னங்களுக்குள் அமைந்துள்ள வாய்க் குழிவு. இதில் நாக்கு, பற்கள், வன்மையான மற்றும் மென்மையான அண்ணம், தொண்டை ஆகியவை அடங்கியுள்ளன. 2. ஒர் உட்குழவின் அல்லது குழாயின் திறப்பு வழி.

moya moya disease : மோயா மோயா நோய் : மண்டையோட்டின் உட்புறம் சார்ந்த பெரிய தமனிகள் அடங்கிய, அறியப் படாத நோய்க் காரணவியலின் தமனி அழற்சி. வில் வடிவத் தமனிகள், குருதிக் குழாய் வரைபடத்தில் புகை போன்ற பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்றன. இது, வயது வந்த இளைஞர்களைப் பாதிக்கிறது. பல சமயங்களில் இருபக்கப் புகைப்படலம் காணப்படுகிறது.

mucaine : முக்கைன் : எக்சோத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mucillage : பிசின்; பசைக்கூழ் : நீரில் கரைந்த தாவரப் பசைப் பொருள்.

mucin : முசின் : பல உயிரணுக்களிலும், சுரப்பிகளிலும் காணப்படும் கிளைக்கோ புரதங்களின் கலவை.

mucinolysis : முசின் சிதைவு; முசின் முறிவு : முசின் சேர்மானம் ஆக்கச் சிதைவுறுதல்.

mucolytics : திட்பக் குறைப்பு மருந்து : மூச்சுக் குழாய்ச் சுரப்பு நீரின் திட்ப ஆற்றலைக் குறைக்கும் மருந்துகள்.

mucosa : சளிச்சவ்வு; மென்சவ்வு; சீதச் சவ்வு.

mucositis : சளிச்சவ்வு அழற்சி.

mucous : சளியுடைய; சீத : சளியால் மூடப்பட்ட கோழை சார்ந்த.

mucoviscidosis : சிறுநீர்ப்பை வீக்கம்.

mucus : சளி; கோழை; சீதம் : சளிச் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் குழம்பு நீர்ப் பொருள்.