பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mycosis

705

myelodysplasia


கள்; சில அழுகற்பொருள்களில் வாழ்பவை, வேறு சில நோய் உண்டாக்குபவை.

mycosis : ஒட்டுயிர்க் காளான் நோய்; பூசண நோய் : ஒட்டுயிர்க் காளான் காரணமாக உண்டாகும் நோய்.

mycotoxins : காளான் நச்சுகள் : ஒட்டுயிர்க் காளான்களினால் உண்டாகும் நச்சுப் பொருட்கள். சுமார் 100 வேதியியல் பொருட்கள் காளான் நச்சுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பல புற்றுநோய் முதலிய பல நோய்களை உண்டாக்கக் கூடியவை.

Mydriacy : மைட்ரியாசில் : டிராபிக்காமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mydriasis : கண்மணி அகற்சி; பாவைத் தளர்த்தி; துளை விரிவு : கண்ணின் மணி இயல்புக்குமீறி விரிவடைதல்.

mydriatics : கண்ணகற்சி மருந்துகள்; பாவை விரிவாக்கி மருந்துகள்; துளை விரிப்பி : கண்மணி அகற்சியை உண்டாகும் மருந்துகள்.

mydrilate : மைட்ரிலேட் : சைக் ளோபெண்டோலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

myelin : மையலின் : ஒரு நரம்பின் பொதி சவ்வில் அடங்கி உள்ள வெண்ணிறக் கொழுப்புப் பொருள்.

myelinisation : மையலின் உருவாக்கம் : ஒரு நரம்பிழையைச் சுற்றி ஒரு மையலின் உறை உருவாதல்.

myelitis : தண்டுவட அழற்சி; நரம்புறை அழற்சி; முதுகுத் தண்டு நாள வீக்கம்; மச்சையழற்சி.

myeloblast : குருணைக் குருதி உயிரணு : முதன் முதலில் கண் டறியப்பட்ட குருணை வடிவ குருதி உயிரணு முன்னோடிப் பொருள். இது குருணைகள் இல்லாத நீல வெள்ளணுத் திசுப்பாய்மம் கொண்டிருக்கிறது.

myeloblastaemia : குருணைக் குருதி உயிரணுக் கரணை : குருதியில் குருணைக் குருதி உயிரணுக்கள் இருத்தல்.

myeloblastoma : குருதி உயிரணுக் கரணைத் தொகுதி : குருதி உயிரணுக் கரணைகளின் ஒரு திரளைத் தொகுதி.

Myelobromol : மைலோபுரோமால் : மிட்புரோனிட்டால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

myelocytosis : மிகைக்குருதி வெள்ளணுக்கள் : குருதி, திசுக்கள் அல்லது இரண்டிலும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் எலும்புமச்சை வெள்ளணுக்கள் இருத்தல்.

myelodysplasia : வளர்ச்சி முரண்பாடு : கருமுளையிலுள்ள நரம்புக் குழாய் முழுமையாக இணைக்கப்