பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myelodysplastic..

706

myelosarcoma


பெறாமல் இருக்கும் ஒரு வளர்ச்சி முரண்பாடு, நரம்புப்புழை அடைப்பின்மையுடன் தொடர்புடைய வளர்ச்சியற்ற நிலை.

myelodysplastic syndromes (MDS) : வெண்புற்று நோய் : எலும்புமச்சையில் ஏற்படும் பதிப்புவாக்கப்பரவல் கோளாறுகளின் ஒரு குழுமம். இதில் வெளிப்புறக் குருதியில் ஒன்று அதற்கு மேற்பட்ட உயிரணு வரிசைகளின் குருதியணுப் பற்றாக்குறையும், எலும்புமச்சையில் மாறுதல்களும் உண்டாகும். இவை கடுமையான நிணநீர் சாராத வெண்புற்றாக மாறும்.

myelofibrosis : எலும்பு மச்சை இழைமம் : எலும்புமச்சைக் குழியினுள் உருவாகும் இழைமத் திசு. இது, இரத்த அணுக்கள் உருவாவதைத் தடுக்கிறது.

myelography : முதுகந்தண்டு வரைபடம் : முதுகந்தண்டின் சிலந்திச் சவ்வு இடைவெளியைக் காட்டும் ஊடுகதிர்ப்படம். தசை நாண் உறைக்குள் ஊடகப் பொருளைச் செலுத்தி, ஊடகப் பொருள் மேலும் கீழும் செல்ல அனுமதிக்கும் வகையில் நோயாளியை நிற்கச்செய்து இந்த ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது.

myeloma : எலும்பு மச்சைப்புற்று : எலும்பு மச்சையிலுள்ள வெள் ளணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். காரணமின்றி எலும்புகளில் வலி உண்டாதல், அடிக்கடி நோய்கள் தொற்றுதல், சிறுநீரகம் செயலி ழத்தல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது. எலும்பு மச்சை மாற்று மருத்துவம் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம்.

myelopathy : முதுகந்தண்டுவட நோய் : கழுத்தைச் சார்ந்த முது கெலும்பில் ஏற்படும் நோய்.

myeloplast : முதிரா ஊனீர் நுண்மம் : எலும்பு மச்சையிலுள்ள உயிரணுக்களின் ஊனீர் நுண்மங்களின் வரிசையிலுள்ள முதிரா வடிவங்கள்.

myelopoiesis : குருணைக் குருதி உயிரணுப் பிரிவினை : பல்வேறு பிரிவுகளுக்கு உள்ளாகும் குருணைக் குருதி உயிரணு, இதில் ஒரே சமயத்தில் புரோமைலோ சைட், மைலோசைட், மெட்டாமைலோசைட் வரிப்பட்டை, பலமுனைக் கரு வெள்ளணு என்ற ஐந்து வரிசை உயிரணுக் கள் முதிர்ச்சி அடைகின்றன.

myeloproliferative : குருணைக் குருதித் திசு மிகைப் பரவல் : குருணை குருதி உயிரணுத் திசு அளவுக்கு அதிகமாகப் பரவுதல் தொடர்பாக

myelosarcoma : எலும்புமச்சை கட்டி : எலும்புமச்சையில்