பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myethesia

707

myoepithelium


அல்லது அதன் உயிரணுத் தனிமங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி.

myethesia : தசையுணர்வு : தசைச்சுருக்கத்தின் போது உண்டாகும் உணர்வு.

myiasis : இறகுப் பூச்சிப் பெருக்கம்; ஈபுழு பரவல் : இரண்டு இறகுகள் உடைய பூச்சிகள் முட்டைப் புழுக்கள் திசுக்களில் அல்லது உடல் உட்குழிவுகளில் படையெடுத்தல்.

Myleran : மைலிரன் : பூசல்ஃபான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

myoblastoma : தசை உயிரணு கட்டி : முதிராத தசை உயிரணுகளில் உண்டாகும் கட்டி.

mycardial : தசையுறை சார்ந்த : 1. தசையுறை தொடர்புடைய அல்லது தசையுறையைப் பாதிக்கும் நோய் தொடர்புடைய. 2. 100 மீட்டர் நீளமுடைய நெஞ்சுப்பை உயிரணு ஒவ்வொரு உயிரணுவும் கிளைகளாகப் பிரிந்து அண்டையிலுள்ள உயிரணுக்களுடன் பின்னிப்பிணை கின்றன்.

myocardial infarction : நெஞ்சுத் தசையழிவு : நெஞ்சுப்பைத் தசைப் பகுதிக்கு இரத்தம் செல்லாத காரணத்தால் நெஞ்சுப்பைத் தசையின் ஒரு பகுதி அழிந்து போதல். இரத்தம் பெறாத திசுக்கள் அழுகி விடுகின்றன. இது குணமாவதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இந்நோய் கண்டவர்க்குத் திடீரென வலியுண்டாகும்; மாரடைப்பும் ஏற்படும்.

myocarditis : நெஞ்சுப்பைத் தசை நீக்கம்; இதயத் தசை அழற்சி.

myocardium : நெஞ்சுப்பைத் தசை இதயத்தசை : நெஞ்சுப் பையின் மையத்தசைப் பகுதி.

myocardosis : இதயத் திசு அழிவு : இதயத்தில் ஏற்படும் ஒரு திசையழிவுக் கோளாறு.

myoccele : எலும்பு துருத்தல் : ஒரு தசையின் கிழிந்த உறையினுள் உள்ள ஒரு கீறல் வழியாக ஒர் எலும்பு துருத்திக்கொண்டிருத்தல்.

Myocrisin : மையோக்ரிசின் : ஆரித்தியோமாலாட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

myocytolysis : தசை இழைமச் சிதைவு : தசை இழைமங்கள் சிதைவுறுதல்.

myoepithelium : சுரப்புத்தோல் உயிரணுக்கள் : சுரக்கும் மேல் தோல் இழைமத்தின் புற அடுக்காக அமைகிற சுருங்கத்தக்க உயிரணுக்கள். மார்பகம், எச்சில், வியர்வைச் சுரப்பிகளில் இவை காணப்படும்.