பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

N

nabothian cyst : நபோத்தியன் கட்டி : கருப்பை வாயின் நபோத்தியன் சுரப்பியில் உண்டாகும் கட்டி இது முத்துப்போல் வெண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். இதனால் தீய விளைவுகள் ஏற்படாது.

nabothian follicles : நபோத்தியன் நீர்மக் கட்டி : கருப்பையின் கழுத்தைச் சார்ந்த கோழைச் சுரப்பிகள் அளவுக்கு மீறி வீங்குவதால் உண்டாகும் நீர்க்கட்டி விரிவாக்கம். அங்கு சுரப்பியின் நாளம் ஒரு குணப் படுத்தும் மேல் தோல் இழை மப்படலத்தின் மூலம் அடைக்கப்பட்டு, இயல்பான சளி வெளியேறாமல் செய்கிறது. அடைபட்ட சுரப்பிப்பைகள் நீர்க்கோவை கட்டியாகும்.

nabothian gland : நபோத்தியன் சுரப்பி : கருப்பை வாயிலுள்ள பல சிறிய, சளி உற்பத்தியாகும் சுரப்பிகளில் ஒன்று. இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் மார்ட்டின் நபோத் பெயரால் அழைக்கப்படுகிறது.

Nacton : நாக்டோன் : போல்டின் மெத்தில் சல்ஃபேட் என்ற மருந்து.

Naecele's obliquity : நெகேலி சரிவு; நெகேலி கோணல் : முதிர் கருமுனையின் தலை ஒரு பக்கமாகச் சாய்ந்து, இடுப்பெலும்பு விளிம்பின் குறுக்குவிட்டம் குறைவாக இருத்தல்.

Naegele's obliquity : நெகேலே கோட்டம் : இடுப்பு விளிம்பில் தலை முகடு பிணைந்திருக்கும் போது கூட்டுக் கணுப்பை விட உந்துறுப்புக்கு அருகிலுள்ள வகிட்டுத் தையல் உறுப்பு.

Naegele's rule : நெகேலே விதி : நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் ஏழு நாட்களைக் கூட்டி, இந்த நாள் கணக்கிடப்படுகிறது. இந்த விதியை ஜெர்மன் மகப்பேறு மருத்துவ அறிஞர் ஃபிரான்ஸ் நெகலே இந்த விதியை வகுத்தார்.

Naegeria : நகலேரியா : மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா