பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

naked nuclei

713

naphazoline


ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது.

maked nuclei :வெற்றுக்கரு மையம் : நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொடியாக உடையக்கூடிய, திசுப்பாய்மம் மிகக் குறைவாக அல்லது இல்லாமல் இருக்கிற கருமையம் உடைய உயிரணு.

NAI : விபத்து இன்றிக் காயம் (என்.ஏ.ஐ).

nalidixic acid : நலிடிக்சிக் அமிலம் : சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படும் மருந்துகளில் ஒன்று.

nalorphine : மார்பின் எதிர்ப்பாளர் : 'மார்பின்' எனப்படும் அபினிச் சத்தினை எதிர்க்கக் கூடியவர்.

naloxone :நாலாக்சோன் : மரமரப்பை எதிர்க்கும் பொருள். இது மரமரப்பூட்டும் வினைகள் அனைத்தையும் எதிர்மாறாக்குகிறது. இது தானே நோவகற்றும் வினையைச் செய்வதில்லை. இது சுமார் அரைமணிநேரம் வேலை செய்கிறது.

nanogram : நானோகிராம் : ஒரு கிராமின் 10 இலட்சத்தில் ஒரு பகுதியைக் குறிக்கும் பொருண்மையின் ஒர் அலகு (109).

nandrolone phenylpropionate : நாண்ட்ரோலோன்-பெனில்புரோப் பியோனேட் : இது டெஸ்டோடிரோன் போன்று புரதம் உருவாக்குகிற, திக வளர்கிற ஒரு மருந்து. ஆனால் இது பெண்கள் மீது ஆண்மையாக்க விளைவுகளைக் கொண்டிருப்பதில்லை ஏதேனும் காரணத்தினால் பெருமளவில் திசு சேதமடைந்துள்ள அல்லது நலிவு நோய் உள்ள நோயா ளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது.

nanomelia : நானோமேலியா : உறுப்புகள் அளவுக்கு மீறிச் சிறிதாகத் தோன்றும் ஒரு வளர்ச்சித் திரிபு.

nanophthalmos : கண்குருக்கம் : கண்கள் மிகச்சிறியதாகக் குறுகி யிருத்தல்.

namous : குள்ளம் : வளர்ச்சி தடைபட்டுள்ள குள்ளத்தன்மை.

nape : பிடரி : கழுத்தின் பின்புறம் பின் கழுத்து.

naphazoline : நாஃபாசோலின் : முக்கில் உண்டாகும் ஒவ்வா