பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

necrobiotic nodule

720

needle


necrobiotic nodule : திசு நசிவுக் கரணை : கீல்வாத மூட்டு அழற்சியின் மிகச் சாதாரணமான நுரையீரல் நோய்க்குறிகள். கரணை திரவமாகி, ஒர் உட் குழிவாக அமைகிற போது அல்லது நோய் பீடிக்கிறபோது இந்த நோய்க்குறிகள் தோன்றுகின்றன. .

necklace : கழுத்துமாலை : கழுத்தைச் சுற்றியணியும் ஒர் ஆரம்.

necrectomy : நசிவுத்திசு அறுவை மருத்துவம் : நசிவடைந்த திசு எதனையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

necrocytosis : உயிரணு அழிவு : உயிரணுக்கு இயல்பு மீறி மரண மடைதல்.

necrology : இறப்பியல் : இறப்புக்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்தல் மரணப் புள்ளியியல்.

necrolysis : திசுப்பகுப்பாய்வு : திசுநசிவு மற்றும் திகப்பகுப்பு.

necrophilia : பிணவேட்கை; பிணப்புணர்ச்சி நோய்; சடல விருப்பு : இறந்த உடல்களுடன் இணைந்திருக்க விரும்பும் மன நோய் பிணத்துடன் உடலுறவு கொள்ளும் உணர்வு.

necropsy : பிணஆய்வு; இறந்த திசு ஆய்வு; சடல ஆய்வு : இறந்த பிறகு செய்யப்படும் உடல் பரிசோதனை.

necrosis : உடல் இழைம அழுகல்; உடல் திசு மடிதல்; நசிவு : அழிவு எலும்புடன் உடற்பகுதி இழைமம் (திக) அழுகுதல்.

necrospermia : அழிவிந்து.

necrotic : அழிவு; திசு அழிவு சார்ந்த : திசுவின் ஒரு பகுதி மரணமடைதல் தொடர்புடைய.

necrotising : திசு அழிப்பு : திசுக்களுக்கு மரணம் உண்டாக்குதல்.

necrotizing facitis : தசை அழுகல் நோய் : உடலுக்குள் நுழையும் தசை தின்னி பாக்டீரியாவினால் உண்டாகும் நோய்.

nedocromil : மூச்சுக்குழாய் அழற்சித் தடைப்பொருள் : உட்சுவாசித்த ஒவ்வாமை ஊக்கியினால் தூண்டப்பட்ட அல்லது துண்டுதலுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பு செலுத்தப்படும்போது உடற்பயிற்சி முலமாகத் தூண்டப்பட்ட உடனடியான மற்றும் காலந்தாழ்ந்த மூச்சுக்குழாய்ச் சுருக் கத்தைத் தடை செய்கிற அழற்சி எதிர்ப்புப் பொருள்.

needle : ஊசி : ஒரு நுண்ணிய, கர்மையான நுனியுடைய கருவி. இது அறுவைச் சிகிச்சையில் தையலிடுவதற்கு, பிணைப்பதற்கு அல்லது துளையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

needle, hypodermic : சதை ஊசி.