பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/722

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

needling

721

nema


needling : ஊசியீடு.

nefopam : நெஃபோபாம் : நோவகற்றும் அல்லது உணர்ச்சியின் மையைத் தூண்டும் ஒரு மருந்து. இது மூச்சோட்டத்தைக் குறைப்பதில்லை.

negative : எதிர்மறை.

negativism : வெற்றி மறுப்பு வாதம்; எதிர் மறைக்கொள்கை : நோயாளி தீவிரமாக ஒத்துழைக்க மறுத்தல்; குறிப்பாகச் செய்யச் சொல்வதற்கு எதிர்மாறாக எதனையும் நோயாளி செய்தல். முரண் மூளை நோயின் போது இது உண்டாகலாம்.

neglect : அசட்டை : கவனம் செலுத்தாமல் சிகிச்சையளித்தல். குறைந்த அளவு உடலியல், உணர்வியல் கவனிப்பு அளிப்பதற்குத் தவறுதல்.

negligence : அசட்டை; கருத்திமை; கவனமின்மை; புறக்கணிப்பு; மனப்பான்மை : மற்றவர்களுக்குக் கேடு விளையும் வகையில் அசட்டையாகவும், கவனக் குறைவாகவும் நடந்து கொள்தல் மருத்துவர் அல்லது செவிலியர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனங்குன்றி இருத்தல். இது சட்டப்படியான இழப்பீடு பெறுவதற்கு வழக்குத் தொடரக் காரணமாக அமையலாம.

Negram : நெக்ராம் : மாலிசிடிக் அமிலத்தின் வணிகப்பெயர்.

Neisseria : உடலுண்ணிக்கிருமி : கிராம் சாயம் எடுக்காத புள்ளிக் கிருமி வகைகளில் ஒன்று. இந்த நோய்கிருமிகள் இணை இணையாக அமைந்திருக்கும் இவை மனிதரிடமும், விலங்குகளிடமும் உடலுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை. மூளை வெளியுறை அழற்சி உண்டாக்கும்.

Nelaton's line : நெலாட்டான் கோடு : இடுப்பு சார்ந்த முது கந்தண்டின் மேற்பகுதியையும் முன் பகுதியையும் இடுப்புக் குழாயுடன் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு. தொடை எலும்பின் பெருங்கால் எலும்பு பெரும்பாலும் இந்தக் கோட்டின் மேல் அல்லது அதற்குக் கீழே அமைந்திருக்கும்.

Nelson syndrome : நெல்சன் நோய் : கபச்சுரப்பிக் கட்டியுடன் தொடர்புடைய நோய். இதனால் தோல் நிறம் மாறுகிறது. அதாவது வெள்ளை கறுப்பாகவும், கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடுகிறது. இதனால், தங்களுக்கு இன வெறித்தொல்லை ஏற்படுவதாகப் பெரும்பாலான நோயாளிகள் கூறுகிறார்கள்.

nema : நேமா : ஒர் இழைமம் தொடர்புடைய முன்னடைச் சொல்.