பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neomembrane

Neosporin


neomembrane : இமைமத்திசு மென்படலம் : மூளையின் அடிப் பகுதியிலுள்ள நாட்பட்ட குருதிக் கட்டியில் மேலுள்ள விளைவினைவுடைய இழைமத் திசுவின் மெல்லிய படலம்.

Neo Mercazole : நியோமெர்க்கா சோல் : கார்போமாசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neomycin : நியோமைசின் : நோயினால் வீக்கமடைந்த தோலைக் குணப்படுத்துவதற்கு வாய்வழி கொடுக்கப்படும் உயிர் எதிர்ப்புப் பொருள். சிலசமயம் குடல் நோய்களுக்கும் வாய்வழி கொடுக்கப்படுகிறது.

Neo Naclex : நியோநாக்ளெக்ஸ் : பாண்ட்ரோஃபுளுவாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neonatal : புதிதாய்ப் பிறந்த; பச்சிளமை : ஆயுளின் பிறப்பு முதல் 28 நாட்கள் வரையுள்ள கால அளவு.

neonate : பச்சிளங் குழந்தை; பச்சிளங் குழவி.

neonatal period : குழவி மரணக்காலம் : ஒரு குழந்தையின் வாழ் நாளில் முதல் 28 நாட்கள். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஏற்படும் குழந்தைகள் மரண வீதம்.

neonate : பச்சிளங்குழவி; பிறந்த பிள்ளை : பிறந்து 4 வாரங்கள் வரையுள்ள குழந்தை.

neonatologist : வாழ் மரபாய்வியலறிஞர் : வாழ் மரபாய்வியலில் வல்லுநர்.

neonatology : குழவி ஆய்வியல்; குழந்தை மருத்துவ இயல் :பிறந்த குழந்தை பற்றிய அறிவியல் ஆய்வு.

neophilism : விசித்திர வாழ்க்கை : புதியவர்கள், பொருள்கள், காட்சிகள் ஆகியவற்றின் இயல்பு மீறிய விசித்திர வாழ்வு.

neoplasia : கழலை உருவாக்கம்; திசு மிகைப்பு; கட்டிகள் : சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும்.

neoplasm : உடற் கட்டி; புது வளர்ச்சி; திசு மிகைப்பெருக்கம்; புதுப் பெருக்கம்; புற்று : புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி.

neoplasty : உறுப்பு மீட்டாக்கம் : உடல் உறுப்புகளை அறுவை மருத்துவம் மூலம் மீட்டாக்கம் செய்தல்.

neoplastic : கழலை சார்ந்த : கழலை தொடர்பான அல்லது உயிரியல் பொருள் அடங்கியுள்ள.

Neosporin : நியோஸ்போரின் : பாலிமிக்சின் நியோமைசின், கிராமிசிடின் அடங்கியுள்ள, கண் நோய்க்கான சொட்டு மருந்து.