பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neostigmine

724

nephrography


neostigmine : நியோஸ்டிக்மைன் : இயக்குதசை இயக்கத்தை மேம் படுத்துவதற்கான ஒரு கோலினெர்ஜிப் பொருள்.

neostriatum : வரிச்சவ்வு : வால் கருமையம் மற்றும் பெரு மூளைக் கருமையம்.

Nepenthe : துயர் மறப்பு மருந்து; மறதியூட்டல்; மன அமைதியூட்டல் : மனத்துயரை மறக்க வைக்கும் மருந்து. இது அபினிச்சாரம் போன்ற ஓர் அபினித் தயாரிப்பு.

nephralgia : சிறுநீரக வலி.

nephrectomy : சிறுநீரக அறுவை; சிறுநீரக நீக்கம்.

Nephril : நெஃப்ரில் : பாலித்தையாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nephrectasia : சிறுநீரக இடுப்புக் குழி விரிவாக்கம் : சிறுநீரகத்தின் இடுப்புக் குழி விரிவடைதல்.

nephritic syndrome : சிறுநீரக நோய் : சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள்.

nephric : சிறுநீரகம் சார்ந்த : சிறு நீரகம் சார்ந்த நோயைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல்.

nephritic : சிறுநீரக அழற்சி : சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம்.

nephritis : சிறுநீரக வீக்கம்; சிறு நீரக அழற்சி : சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல்.

nephroblastoma : சிறுநீரகக் கட்டி : வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி.

nephrocalcinosis : சிறுநீரகச் சுண்ணமாக்கம்; சிறுநீரகச் சுண்ண மேறல் : சிறுநீரகத்தினுள் சுண்ணமாக்குதல் நடைபெறும் பல்வேறு பகுதிகள்.

nephrocapsulectomy : சிறுநீரக உறை நீக்கம்; சிறுநீரகக் கூட்டு வெட்டு : சிறுநீரக மேலுறையை அறுவை மருத்துவம் மூலம் நீக்குதல்.

nephrogenic : சிறுநீரக : சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது.

nephrogram : சிறுநீரக ஊடுகதிர்ப் படம் : சிறுநீரகத்தின் ஊடுகதிர்ப் படம். ஊடு கதிரைக் காட்டக் கூடிய பொருளை நரம்பு வழியாகச் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

nephrography : சிறுநீரக ஊடுகதிர்ப்படம் எடுத்தல் : ஒப்பீட்டு ஊடகத்தை நரம்பு வழியாகச் செலுத்தி எடுக்கப்படும் சிறு நீரக ஊடு கதிர்ப்படம்.