பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

night blindness

738

niridazole


யிருத்தல். ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஆல்பர்ட் நியமான், ஜெர்மன் மருத்துவ அறிஞர் லுட்விக்பிக் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

night blindness : மாலைக்கண்; மாலைக் குருடு : குறைந்த ஒளி யில் கண் தெரியாதிருக்கும் நோய். இது வைட்டமின் A பற்றாக்குறையினால் உண்டாகிறது.

nighit cry : உறக்கக் கீச்சொலி; இராக் கதறல்; உரத்தக் குரல் : உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோயின் (டிபி) அறிகுறி.

Nightingale Ward : நைட்டிங்கேல் கூடம் : மருத்துவமனையிலுள்ள ஒரு செவ்வகமான நோயாளர் படுக்கைக் கூடம். இதில் 30-36 நோயாளிகளுக்கான படுக்கைகள், சன்னல்களுக்கிடையிலான சுவர்களின் நெடுகில் அமைக்கப்பட்டிருக்கும்.

nightmare : இரவு அரட்டு.

night soil : மலம்,கழிமலம்.

nigral : நரம்புஉயிரணு : "சப்ஸ் டான்ஷியாநிக்ரா" என்பதன் நரம்பு உயிரணு,

nigilism : சூனியவாதம்/எதிர் மறுப்பு வாதம் : சமய ஒழுக்கத் துறைகளில் நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் அனைத்தையும் மறுக்கும் கொள்கை. அழிவுச் செயல்களில் ஈடுபடுதல்.

nigilistic delusion : சூனியவாத மருட்சி : தான், மற்றவர்கள் உலகில் இல்லாமலிருக்கிறது அல்லது முடியப்போகிறது என்ற பொய்யான உணர்வு.

nikethamide : நிக்கெத்தமைடு : மூச்சடைப்பு மயக்கத்தின் போது பயன்படுத்தப்படும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மருந்து. இதனை நரம்பு ஊசி அல்லது தசை மூலம் கொடுக்கலாம்.

Nikolsky's sign : நிக்கோல்ஸ்கி நோய் : தோலை இலேசாக அழுத்தினாலும், இயல்பான மேல் தோல், ஈரமான கையில் ரப்பர் கையுறை நகர்வதுபோல் நகர்தல். இது நீர்க்கொப்புளத் தோல் நோயின் அறிகுறியாகும்.

Nilodin : நிலோடின் : லுக்காந்தோன் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

nipple : முலைக்காம்பு; காம்பு : மார்பகத்தின் மையத்திலுள்ள கூம்பு வடிவக் குமிழ். இதற்கடியில் பால் சுரக்கும் நாளங்கள் அமைந்திருக்கும்.

niridazole : நிதிடாசோல் : கடுமையான குருதி உறைகட்டி