பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adenovirsis

73

adiemorrhysis


adenovirsis : சுரப்பிக் கிருமிகள் : ஊனீர்ச் சுரப்புச் சார்ந்த 47 தனித்தனி வகைகள் அடங்கிய கிருமிகளைக் கொண்ட ஒரு டி.என்.ஏ குழுமம். இந்த 47 வகைகளில் மனிதனிடம் 31 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு விலங்கு இனங்களில் வேறு பல வகைகள் காணப் படுகின்றன. இவற்றுள் சில மேல் மூச்சுக் கோளாறுகளையும், வேறு சில சீத சன்னி அல்லது சளிக்காய்ச்சல் என்னும் நிமோனியாக் காய்ச்சலையும், இன்னும் சில கொம்பு நக அழற்சியையும் உண்டாக்குகின்றன.

adenyl : அடினைல்.

adenylate cyclose : அடினைலேட் வளைவாங்கி.

adenylic : அடினிலிக்; அடினிலிக் அமிலம் : அடினோசின் மற்றும் பாஸ்போரிக் அமிலத்தை உறைமானம் செய்யும்போது உருவாகும் ஒருவகை அமிலம்.

adequacy : நிறைவு : நிறைவடைந்த நிலை, போதுமான அளவு, ஏற்ற அளவு.

adephagia : பெரும் பசி நோய்.

adermine : ஆடர்மின் : பைரிடாக்சின்; வைட்டமின் B6.

adephagia : பசிநோய்; அடங்காப் பசி.

adexolin : அடக்சோலின் : A, D வைட்டமின்களின் கலவை.

adherence : ஒட்டுப் பண்பு : ஒட்டிக்கொள்ளும் குணமுடைய (எ-டு) உடல் அணுக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏற்பிகளின் நட்புக் கொள்ளும் தன்மையுடைய நுண்ணுயிரிகள்.

adherent : ஒட்டுந்திறனுடைய; ஒட்டிய :

adhesin : ஒட்டுகை; ஒட்டல் கூறு: உடல் அணு ஏற்பிகளில் ஒட்டும் பண்புள்ள நுண்ணுயிர் அணுக்களில் மேற்பரப்பில் காணப்படும் ஒரு மூலக்கூறு.

adhesion : இருவேறு உறுப்பிணைவு; ஒட்டுகை : வீங்கிய இரு வேறு உறுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பிளவுற்ற பரப்பு இணைவு. அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். முட்டுகளில் இது போன்ற பிணைவு, அசைவைக் கட்டுப்படுத்துகிறது. இரு மார்பு வரிப் பரப்புகளிடையிலான பிணைவு காரணமாக மார்புக் கூடு முழுமையாக இணைவதைத் தடுக்கிறது.

adhesive : ஒட்டக்கூடிய; ஒட்டவல்ல.

adhesive top : ஒட்டும் பட்டை.

adiadach okinesis : மறித்தியங்கு திறனிழப்பு.

adiemorrhysis : இரத்தவோட்ட நிறுத்தல்.