பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nonsense syndrome

744

Nonne-Milroy's..


யாத முன்னோடி ஆர்.என்.ஏ மூலக்கூறில் ஏற்படும் ஒற்றை டி.என்.ஏ மூல மாற்றம்.

nonsense syndrome : தவறான பதில்கூறும் நோய் : எளிமையான கேள்விகளுக்குக்கூடத் தவறான பதில்களை ஒருவர் கூறும் நிலை.

nonspecific urethritis : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட்டை யில்லாத சிறுநீர்ப்புறவழி அழற்சி.

non-stress test : மன அழுத்தமின்மைச் சோதனை : முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கானித்தில் இதில் அடங்கும். இது நச்சுக்கொடிக் குருதிநாள மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கணித்தறிய உதவுகிறது.

non-striated muscle : அனிச்சைத் தசை : உள்ளுறுப்புகளின் செயல்கைளக் கட்டுப்படுத்துகிற மென்மையான (அனிச்சை) தசைகள்.

non-tuberculous mycobacterial disease : காசநோய் சாராத நீளு ருளைப் பாக்டீரியா நோய் : காச நோய் சாராத நீளுருளைப் பாக்டீரியாவினால் உண்டாகும் மருத்துவ நோய். இது கடுமையான நுரையீரல் நோய்கள், கழுத்து நிணநீர்க்கரணை வீக்கம், தோல் மற்றும் மென் திக நோய்கள், நடு நரம்பு நோய்கள் வடிவில் இருக்கலாம்.

non-ulcer dyspepsia : அழற்சிப்புண் அல்லாத அசீரணம் : கடும் அழற்சிப்புண்ணாதல் இல்லாதிருக்கையில் சீரணப்பாதைப் புண் உண்டாகும் நிலை. இதனை, அகநோக்குக் கருவியில் இழைம அழற்சி, முன் சிறுகுடல் சீதச் சவ்வு அரிமானங்கள் என்ற நோய்களாகக் காணலாம்.

non-union : இணையா எலும்பு முறிவு : ஒன்பது மாதங்களுக்கு மேலாக இணையாமலிருக்கும் எலும்பு முறிவு.

non-verbal : வாய்மொழியில்லாச் செய்தித்தொடர்பு சொற்களைப் பயன்படுத்தாமல் செய்திகளைத் தெரிவித்தல்; செய்தித்தொடர்பு; உடல்மொழி.

non-viable : கையறு நிலை : சுதந்திரமாக இயங்கமுடியாத நிலை

Noone's syndrome : நூன் நோய் : போலி மூளைக்கோளக்கட்டி இதில் உள்மண்டையோட்டு வீக்கமும், கண்குமிழ் அழற்சியும் காணப்படும்.

Nonne-Milroy's disease : நோன்-மில்ராய் நோய் : நிணநீர் நாளம் விரிவடைவதன் காரண